வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் தெலுங்கில் பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக்காகி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. பவன் கல்யாண், ராணா நடித்திருந்த இந்தப்படம் ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது.
மலையாளத்தில் இரண்டு ஹீரோக்களின் கதாபாத்திர பெயர்களுமே டைட்டிலில் இடம்பெற்றிருந்தாலும் தெலுங்கில் பவன் கல்யாணின் கதாபாத்திர பெயர் மட்டுமே டைட்டிலாக இடம் பிடித்தது. அதேசமயம் ராணாவின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் அவர் நடித்துள்ள டேனியல் சேகர் என்கிற கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதோடு தனக்கு முழு திருப்தி அளித்துள்ளதாக கூறியுள்ளார் ராணா.
இந்த படத்தின் ஒரிஜினலான அய்யப்பனும் கோஷியும் படத்தை தான் பார்த்திருந்தாலும் கூட அதில் நடித்த பிரித்விராஜின் நடிப்பின் சாயல் கொஞ்சம் கூட தெரியாமல் நடித்துள்ளதாக கூறியுள்ள ராணா அதற்கு பதிலாக அயன்மேன் ஆக நடித்த ராபர்ட் டவுனி ஜூனியரின் நடிப்பை கொஞ்சம் உள்வாங்கி அதை டேனியல் சேகர் கதாபாத்திரத்தில் பிரதிபலித்ததாக கூறியுள்ளார்.
மேலும் பீம்லா நாயக் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறதா என நிருபர்கள் கேட்டதற்கு பீம்லா நாயக்கிற்கும் டேனியல் சேகருக்குமான பிரச்சனை தான் கடைசியில் சுமூகமாக முடிந்துவிட்டதே.. அப்புறம் எதற்கு இரண்டாம் பாகம் என்று பதில் கேள்வி எழுப்பி இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பு இல்லை என சூசகமாக கூறியுள்ளார்.