அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை கடத்தல் வழக்கு முடிவுக்கு வர இருந்த நேரத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னணி நடிகர் திலீப் விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக திலீபின் நண்பரும் இயக்குனருமான பாலச்சந்திர குமார் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து திலீப் மீது புதிதாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் 12 சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பு நீதிமன்றத்தை அணுகியது. என்றாலும் 12 சாட்சிகளில் எட்டு சாட்சிகளை மறுபடியும் விசாரிக்கலாம் என்று அரசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விசாரணையை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. திலீப்பின் உறவினர்களின் செல்போன அழைப்புகளை பரிசோதிக்கவும் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளது.