நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பழம்பெரும் மலையாள இசை அமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத். 73 வயதான அவர் நாடத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர், திரைப்பட இசை தவிர்த்து ஐயப்ப பக்தி பாடல்கள் மூலம் புகழ்பெற்றவர். முதுமை காரணமாக மூச்சு திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவருக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
வாழ்க்கை குறிப்பு:
1973 ஆம் ஆண்டு வெளிவந்த 'இயேசு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார், அதன் பிறகு 25 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ஒரு சில தமிழ் படத்திற்கும் இசை அமைத்துள்ளர். பிரின்சிபல் ஒலிவில், மாமலக்கப்புறத், பாப்பன் பிரியப்பட்ட பாப்பன், ஆறந்தே முல்ல கொச்சு முல்லா போன்றவை அவர் இசை அமைத்த முக்கியமான படங்கள். 2000 பக்தி பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ள அவர், இந்த ஆண்டுக்கான 'ஹரிவராசனம்' விருதைப் பெற்றார்.