ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? | ரஜினி செய்த மாற்றம் |
தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படங்கள் சென்சார் சான்றிதழ் கூட இல்லாமல் தான் ரிலீஸாகின்றன. அப்படி மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளியான சுருளி திரைப்படம், தற்போது மீண்டும் ஓடிடியில் தொடர்ந்து ஒளிபரப்பாவதற்கு போலீஸாரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளனர். ஓடிடி வரலாற்றில் இப்படி நடப்பது இதுதான் முதன்முறை. காரணம் ரொம்பவே விசித்திரமானது.
மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்காட்டு வித்தியாசமான படங்களை எடுத்து பெயர் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. இவர்தான் இந்த சுருளி படத்தை இயக்கியுள்ளார். படத்தில் அதிகப்படியான இடங்களில் ஆபாச வார்த்தைகள் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், “இந்தப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ரொம்பவே மோசமானது” என்று கூறி இதுகுறித்து படத்தின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி, நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்தப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு ஏற்ற படமா என காவல்துறையில் உள்ள மூன்று அதிகாரிகள் விசாரித்து அதற்கான சான்று தரவேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்தநிலையில் சுருளி படத்தை பார்த்துவிட்டு போலீஸ் தரப்பில் இருந்து தடையில்லா சான்றிதழ் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது.