'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

பிரபல நடிகை கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, 84 நாள் சிறைக்கு பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கடத்தல் வழக்கை விசாரித்த டிஎஸ்பி பைஜு புவலோசை கொலை செய்ய திலீப் முயற்சித்த தகவல்கள் சமீபத்தில் வெளியானது. இதை தொடர்ந்து திலீப் மற்றும் அவரது உறவினர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஜாமினில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திலீபின் வழக்கறிஞர் கொரோனா காலம் என்பதால் இந்த வழக்கில் திலீபை கைது செய்யக்கூடாது. வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார். வழக்கு விசாரணையை வருகிற 14ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிமன்றம் அதுவரை திலீபை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டதோடு, முன்ஜாமின் குறித்த போலீசின் நிலைப்பாட்டை தெரிவிக்கவும் உத்தரவிட்டது.




