தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

தெலுங்கில் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணா ஒருபக்கம் சினிமாவில் நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தனியாக துவங்கியுள்ள ஆஹா என்கிற ஒடிடி தளத்தில் 'அன்ஸ்டாப்பபில் வித் என்பிகே' என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையில் ஒளிபரப்பாகும் எபிசோடுக்காக சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் அனில் ரவிபுடி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.
இந்தநிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரவிதேஜா கலந்துகொண்டுள்ளார். இதுபற்றிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு ரவி தேஜாவும் ஆளானார். அதுபற்றி இந்த நிகழ்ச்சியில் நேரடியாகவே ரவிதேஜாவிடம் கேட்டுள்ளார் பாலகிருஷ்ணா.
அதுமட்டுமல்ல, சில வருடங்களுக்கு முன் ஒருமுறை ராவிதேஜாவை பாலகிருஷ்ணா அறைந்தார் என்று மீடியாக்களில் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என ரவிதேஜாவிடம் இந்த நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா கேட்க அதற்கும் பதில் சொல்கிறார் ரவிதேஜா.. இந்தநிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது இந்த இரண்டு கேள்விகளுக்கும் நமக்கு விடை தெரிந்துவிடும்.