
நானியிடம் நஸ்ரியா போட்ட கண்டிஷன்
இந்த நிகழ்வில் நானி பேசும்போது, “இந்த லாக்டவுன் காலகட்டத்தில் எனது நேரத்தை அற்புதமாக செலவழிக்க உதவியது மலையாள படங்கள் தான்.. அய்யப்பனும் கோஷியும், ட்ரைவிங் லைசென்ஸ், லூசிபர் என பல அருமையான படங்களை பார்த்தேன்” என்று கூறினார்.
அப்போது அவரிடம் .மலையாள படங்களில் நடிப்பீர்களா என கேட்டபோது, “நிச்சயமாக நடிப்பேன்.. உங்களுடைய நஸ்ரியா தற்போது என்னுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பஹத் பாசில் எனக்கு நல்ல நண்பாராகிவிட்டார். என்னிடம் நஸ்ரியா பேசும்போது கூட, நீங்கள் மலையாள படங்களில் நடிப்பதாக இருந்தால் முதலில் பஹத் பாசில் படத்தில் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என செல்லமாக கண்டிஷனே போட்டுள்ளார்” என கூறினார் நானி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!