'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தற்போது அய்யப்பனும் கோஷியும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக்கில் நடித்து முடித்துவிட்ட நடிகர் பவன் கல்யாண், அதை தொடர்ந்து தான் ஏற்கனவே நடித்துவந்த ஹரிஹர வீர மல்லு என்கிற படத்தின் வேலைகளை மீண்டும் கவனிக்க ஆரம்பித்துவிட்டார். நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தை கிரிஷ் இயக்குகிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சுமார் 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் நிலைமை சரியான பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
அந்தவகையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் மீண்டும் துவங்கப்பட உள்ளது. இந்தநிலையில் இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை செய்ய சொன்ன பவன் கல்யாண் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பாக ஒருமுறை ஸ்கிரிப்ட் முழுவதையும் படித்து பார்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் இயக்குனர் க்ரிஷ்.