அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

'அழகிய தீயே படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து இயக்குனர் சேரனின் 'மாயக்கண்ணாடி' ராமன் தேடிய சீதை என பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை நவ்யா நாயர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்த இவர் அவ்வப்போது சில சினிமா விழாக்களில் மட்டும் தலைகாட்டி வந்தார். கடந்த 2012க்கு பிறகு அவர் மலையாளத்தில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
இந்தநிலையில் தற்போது ஒன்பது வருடங்கள் கழித்து 'ஒருத்தீ' என்கிற படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நவ்யா நாயர். இயக்குனர் விகே பிரகாஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நல்ல கதைகள் வரும் பட்சத்தில் மீண்டும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார் நவ்யா நாயர்.