'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

சமீபத்தில் ராபிடோ என்கிற நிறுவனத்துக்காக நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த விளம்பர வீடியோ ஒன்று வெளியானது. இருசக்கர வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்ல உதவும் ராபிடோ என்கிற ஆப்-பின் வசதிகளை விவரிக்கும் இந்த விளம்பரத்தில் தெலங்கானா அரசு போக்குவரத்து பேருந்துகள் கூட்ட நெரிசலாக இருப்பதாகவும் அவற்றில் பயணிப்பதற்கு பதிலாக ராபிடோ பயன்படுத்துவது சிறந்தது என்றும் அல்லு அர்ஜுன் வசனம் பேசியிருந்தார். .
இது அரசு போக்குவரத்து பேருந்துகளை அவமதிப்பு செய்யும் விதமாக இருப்பதாக கூறிய தெலங்கானா அரசு போக்குவரத்து கழக நிர்வாக மேலாளர் சஜ்ஜனார், அரசு சேவை நிறுவனங்களை அவமதிப்பு செய்யும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார். இதை தொடர்ந்து அந்த நிறுவனம் விளம்பரத்தில் சிறிய மாற்றம் செய்ததே தவிர, அரசு பேருந்துகள் பற்றிய விமர்சனத்தை நீக்கவில்லை.
இதையடுத்து தற்போது தெலங்கானா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அந்த விளம்பரத்தை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது அந்த வீடியோவை நீக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு பேருந்துகள் என்பவை பொதுச்சொத்து. அவை மக்களை நம்பியே இயங்கி வருகின்றன. பல தலைமுறைகளாக தொடரும் அந்த சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது..