'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள நடிகர் சங்கத்திற்கு (அம்மா) 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மோகன்லால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வருகிற 19ம் தேதி 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது.
இந்த தேர்தலுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தலைவர் பதவிக்கு நடிகர் மோகன்லால், பொதுச்செயலாளர் பதவிக்கு இடைவேளை பாபு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்களை வாபஸ் பெறும் தேதி முடிந்த நிலையில், நேற்று மனுக்கள் பரிசீலனை நடந்தது.
இதில் தலைவர் பதவிக்கும், பொதுச்செயலாளர் பதவிக்கும் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து தலைவராக மீண்டும் நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்படுகிறார். இதே போல் பொதுச்செயலாளராக இடைவேளை பாபுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். மற்ற பதவிகளுக்கும் 19ம் தேதி வாக்குபதிவு நடக்கிறது. அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படுகிறது.