அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
பிரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லால், சுனில் ஷெட்டி, அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகும் படம் 'மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்மம்'. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இப்படத்திற்கு மலையாளத் திரையுலகின் சீனியர் ஹீரோவான மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“உலகம் முழுவதும் வெளியாகும் 'மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்மம்' படத்திற்காக மோகன்லால், பிரியதர்ஷன் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து மோகன்லால், “அன்புள்ள இச்சக்கா, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மலையாளத் திரையுலகில் உள்ள நடிகர்கள் எந்த ஈகோவும் இல்லாமல் ஒருவருக்கு மற்றொருவர் வாழ்த்து கூறி இந்தியத் திரையுலகினருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.