வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் |
சமீபத்தில் வெளியான குருப் படம் மூலம் வெற்றியை ருசித்த துல்கர் சல்மான், தற்போது தெலுங்கில் தான் நடித்துவரும் லெப்டினன்ட் ராம் என்கிற படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கும் இந்த படம் 1964-ம் ஆண்டில் ராணுவ பின்னணியில் நடைபெறும் வகையில் அதேசமயம் ஒரு பீரியட் காதல் கதையாக உருவாகிறது. இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார்
இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹிமாலய மலை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக உலகிலேயே உயரமான இடத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் என்கிற பெருமையை பெற்றுள்ள ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹிக்கிம் என்கிற ஊரில் தற்போது இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 4440 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அந்த போஸ்ட் ஆபீஸின் முன்பாக நின்று தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அந்தப்பகுதியில் வசிக்கும் மனிதர்கள் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் துல்கர் சல்மான்.