தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
கடந்த நான்கு வருடங்களுக்கு முன் தென்னிந்திய சினிமா மட்டுமல்ல பாலிவுட்டையும் சேர்ந்து ஆச்சர்யப்பட வைத்த படம் தான் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன். இந்தப்படத்தை நம்மால் ரீமேக் செய்து நடிக்க முடியாது என மற்ற மொழியினர் அனைவரும் ஜகா வாங்கிக்கொள்ளும் அளவுக்கு பிரமிக்கும் விதமாக இந்தப்படத்தை உருவாக்கி இருந்தார்கள் இயக்குனர் வைசாக்கும் அதன் கதாசிரியர் உதய கிருஷ்ணாவும்.
அப்படி ஒரு வெற்றியை ருசித்த இந்த கூட்டணி தற்போது மோகன்லாலுடன் மீண்டும் மான்ஸ்டர் என்கிற படத்தில் இணைந்துள்ளது. நடிகை ஹனிரோஸ் மற்றும் தெலுங்கிலிருந்து நடிகை லட்சுமி மஞ்சு ஆகியோர் இந்தப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு துவங்கிய இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை லட்சுமி மஞ்சு சமூக வலைதளங்களில் வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.