பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான படம் த்ரிஷ்யம்-2. முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. தெலுங்கில் த்ரிஷயம் படத்தை ரீமேக் செய்து வெற்றியை ருசித்த நடிகர் வெங்கடேஷ் உடனடியாக த்ரிஷ்யம்-2 ரீமேக்கையும் துவங்கி முடித்து விட்டார். துல்லியமான வெற்றியை சொல்லி அடிப்பதற்காக முதல் பாகத்தை இயக்கிய நடிகை ஸ்ரீபிரியாவை ஒதுக்கிவிட்டு இயக்குனர் ஜீத்து ஜோசப்பையே இந்தப்படத்தை இயக்கவும் வைத்துவிட்டார்.
ஆனால் படம் தயாராகி சில மாதங்கள் ஆனாலும் கூட ரிலீசில் தாமதம் ஆகிக்கொண்டே வந்தது. இந்தநிலையில் வரும் நவ-25ம் தேதி அமேசன் பிரைமில் நேரடியாக வெளியாகிறது த்ரிஷ்யம்-2. ஆனால் அமேசான் பிரைமுக்கு முன்னதாக இந்தப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக ஒப்பந்தம் செய்திருந்தாராம் தயாரிப்பாளர் சுரேஷ்பாபு.
ஆனால் தற்போது திடீரென அமேசான் பிரைமுடன் புதிய ஒப்பந்தம் போட்டு படத்தை வெளியிடுவதாக அறிவித்துவிட்டார். இதற்காக ஹாட்ஸ்டாருடன் போட்ட ஒப்பந்தத்தை கூட கேன்சல் செய்யாமல் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹாட்ஸ்டார் நிறுவனம் இது தொடர்பாக அவர்மீது புகார் அளித்து வழக்கு தொடரும் வேலைகளில் இறங்கியுள்ளதாம்.