தற்போது ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்துள்ள சிரஞ்சீவி அடுத்ததாக மலையாள லூசிபர் மற்றும் தமிழ் வேதாளம் ஆகிய படங்களின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கிறார். இடையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் ஓய்வெடுத்து வருகிறார். இந்தநிலையில் தன்னை தேடி வந்து மருத்துவ செலவுக்கு உதவும்படி கேட்ட தனது ரசிகர் ஒருவருக்கு சிரஞ்சீவி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
சிரஞ்சீவியின் அலுவலகத்துக்கு அவரை தேடிவந்த வெங்கட் என்கிற ரசிகர் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக பெரிய அளவில் பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். அதை பொறுமையாக கேட்டுக்கொண்ட சிரஞ்சீவி, எதற்கும் இன்னொரு மருத்துவமனையில் நோயின் உண்மைத்தன்மை குறித்து சோதனை செய்துகொள்ளுமாறு கூறி அவரே ஒரு ஒரு பிரபல மருத்துவமனையையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவருக்கு ஆரம்பகட்ட செலவுக்காக இரண்டு லட்சம் கொடுத்த சிரஞ்சீவி, சிகிச்சைக்கு செலவாகும் தொகை முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.
“நான் அவரது ரசிகன் என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவருக்கு நன்றி சொல்ல என் வாழ்நாள் முழுதும் போதாது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் அந்த ரசிகர்..