ஆக.,11ல் ‛கோப்ரா' ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு | ரஜினி படங்களை குற்றம் சாட்டிய ஆர்ஜே பாலாஜி | விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தில் சூர்யா | சந்திரமுகி 2 கை மாறியதா? | சிவகார்த்திகேயனின் அயலான் ரிலீஸ் எப்போது | நடிகைகளுக்கு மட்டும்தான் போட்டோ ஷுட்டா ? கலக்கும் கமல்ஹாசன் | தங்கை நிக்கி திருமணத்தன்று குழந்தை பெற்ற அக்கா சஞ்சனா | டாக்டர் ராஜசேகர் குடும்பத்திற்கு இன்று டபுள் ரிலீஸ் | பசுவுக்கு ஒரு நியாயம், கோழிக்கு ஒரு நியாயமா - நிகிலா விமல் | என்ன சொல்கிறார் 'சூப்பர் குயின்' பார்வதி |
தெலுங்கு திரையுலகிற்கு ஒரு தமன் போல மலையாள திரையுலகில் இசையமைப்பாளர் கோபி சுந்தர் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். தமிழில் தோழா, பெங்களூரு நாட்கள் ஆகிய படங்களுக்கு இசையமைத்த இவர், தற்போது தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள 'மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்' படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் அல்லு அர்ஜுன். இந்தப்படத்தில் கோபிசுந்தர் இசையமைத்த 'லேஹெராயி' என்கிற பாடல் தனக்கு பிடித்த பாடல் என்று கூறிய அல்லு அர்ஜுன் தினசரி காரில் பயணிக்கும்போது கோபிசுந்தரின் இசையில் உருவான பல பாடல்களை தான் கேட்பதாகவும் கூறினார். அதுமட்டுமல்ல தனது படத்திற்கும் கோபிசுந்தர் இசையமைக்க வேண்டும் என அழைப்பும் விடுத்து கோபிசுந்தரை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் அல்லு அர்ஜுன்.