Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஒன்பதுல குரு

ஒன்பதுல குரு,Onbathula Guru
19 மார், 2013 - 17:53 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஒன்பதுல குரு

 

தினமலர் விமர்சனம்


"இளைய தளபதி விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார், இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் "ஒன்பதுல குரு".

வினய், சத்யன், அரவிந்த் ஆகாஷ், சாம்ஸ், பிரேம்ஜி ஐவரும் கல்லூரி நண்பர்கள். கல்லூரி காலம் முடிந்து இந்த ஐவரில் வினயக்கு ஒரு குண்டு பெண்ணுடன் கட்டாய திருமணமும், சத்யனுக்கு வசதியான வீட்டோடு மருமகன் எனும் அடிமை வாழ்க்கையும், அரவிந்த் ஆகாஷ்க்கு காதல் திருமணம் என்றாலும் கசக்கும் திருமணவாழ்க்கையாகவும் அமைந்து விட, மூவரும் இல்லற வாழ்க்கையை வெறுத்து மீண்டும் பேச்சுலர் ஆகும் முடிவோடு வீட்டை விட்டு பெங்களூர் ஓடுகின்றனர். போகும்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் தங்கள் நண்பன் சாம்ஸையும் கூட்டிக் கொண்டு, பெங்களூருவில் காஸ்ட்லியான கள்ளக்காதல் வாழ்க்கை நடத்தும் பிரேம்ஜியின் தயவில் ஜாகையும், வேலையும் தேடிக்கொண்டு ஜாலி வாழ்க்கை வாழ்கின்றனர்.

இவர்களின் ஜாலி புத்தியை தெரிந்து கொண்டு அழகி லட்சுமிராய், நால்வரையும் மிரட்டி கடத்தி கோடிக்கணக்கில் பணம் பறிக்கிறார். அவரிடமிருந்து தப்பித்தால் போதுமென்று எஸ்கேப் ஆகும் நால்வரும், இல்லறமே இனிய அறம் என்று மீண்டும் தங்களது மனைவிமார்களைத் தேடி வருவதே "ஒன்பதுல குரு படத்தின் ஒட்டுமொத்த கதை! இந்த ஐந்தாறு வரிக் கதையை காமெடியாக எடுக்கிறேன் பேர்வழி... என ஆங்காங்கே கடித்தாலும், பெருவாரியாக சிரிக்கும் படியும், ரசிக்கும்படியும் எடுத்து ஜெயித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பி.டி.செல்வகுமார் என்பது ஆறுதல்!

வினய், சத்யன், அரவிந்த், சாம்ஸ், பி‌ரேம்ஜி ஐவருக்குமே சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மெய்யாலுமே ஹீரோ வினய்க்கு ‌பெரிய மனசுதாங்க... அந்த குண்டுப்பெண் கீதாசிங் ஜோடியாக நடிக்க சம்மதித்தற்காகவும், மேற்படி ஐவரில் ஒருவராக நடித்ததற்காகவும் வினய்யை பாராட்டலாம்!

பெங்களூர் அழகி சஞ்ஜனவாக வரும் லட்சுமிராய்யும், குமுது டீச்சராக வரும் சோனாவும், கவர்ச்சி ப்ளஸ். ஆனால் லட்சுமிராய் திடீரென்று நால்வரிடமும் துப்பாக்கியை காட்டி மிரட்டுவது நம்பமுடியாத ஹம்பக்! கீதாசிங், கார்த்திகாஷெட்டி, ரூபாஸ்ரீ மூவரும் ஓ.கே. சத்யனின் மாமியாராக மாஜி நாயகி மந்த்ராவா ஓவரப்பா!

"கேவின் இசையில் எக்கச்சக்க பழைய பாடல்கள் இப்படத்தின் கதையில் சிட்சுவேஷனுக்காக என்றாலும் டூ-மச்! சாரி, பெட்டர்லக் நெக்ஸ்ட்டைம்! செல்லதுரையின் ஒளிப்பதிவும், கே.எஸ்.ரவிக்குமார், டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட இயக்குநர்களின் பங்களிப்பும் படத்தின் பெரும்பலம்!

பி.டி.செல்வகுமாரின் எழுத்து, இயக்கத்தில் கோர்வையாக கதை சொல்லப்படாவிட்டாலும், "ஒன்பதுல குரு", ஒன்பதுல குருவாக இல்லாவிட்டாலும் ஏழ‌ரைச்சனியாக இல்லாதது ஆறுதல்!-----------------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்கதை, மேக்கிங், என்றெல்லாம் கவலைப்படாமல் சும்மா சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, க.ல.தி.ஆ?, இ.போ.நா.வா. டைப்பில் ஒரு ஜாலிப் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் பி.டி.செல்வகுமார்.

மனைவி மற்றும் குடும்பம் மேல் கடுப்பு கொண்ட மூன்று இளைஞர்கள் இனிமேல் பிரம்மசாரிகளாக வாழப்போவதாக சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு பெங்களூருவுக்கு ஓடுகிறார்கள். அங்கே ஒரு பெண்ணை பார்த்து ஜொள்ளுவிட, அவள் இவர்களை பிளாக்மெயில் செய்ய, அப்புறம் என்ன? சம்சாரமே சந்தோஷம் என்று சொந்த ஊருக்கு நடையைக் கட்டுகிறார்கள்.

படத்தின் ஆரம்பக்காட்சி, பவர் ஸ்டாரின் டான்ஸுடன் ஆரம்பமாகிறது. தியேட்டரில் ரசிக்கிறார்கள்!! (என்னய்யா நடக்குது நாட்ல) பில்லா, ரங்கா, கோச்சடையான் இதெல்லாம் இந்தப் படத்தின் கதாநாயகர்களின் பெயர்கள். கமல், ரஜினி, அஜித், பாரதிராஜா, மணிரத்னம் என்று அவர்களுடைய பழைய படங்களின் வசனம், காட்சிகளை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ரீரெக்கார்டிங்குடன் சேர்த்துக் கொண்டு கலகல கபடி ஆடியிருக்கிறார்கள். விஜய், பிரேம்ஜி, சத்யன், அரவிந்த், சாம்ஸ் என்று ஆளுக்கு ஒரு கதை.

“பங்களா வாயன்’ பிரேம்ஜியின் “சோனா டீச்சர்’ கதை கொஞ்சம் ஓவர். ஆனால் தியேட்டரில் கைதட்டுகிறார்கள். சத்யனின் மாமியாராக, மப்பு மந்தாரமுமான மந்த்ரா! கராத்தே ஃபைட் எல்லாம் போடுகிறார். ஹிஹி. இசை ஓ.கே!

ஒன்பதுல குரு - கிச்சு கிச்சு

குமுதம் ரேட்டிங் - ஓகேவாசகர் கருத்து (15)

rasigan - chennai,இந்தியா
30 மார், 2013 - 12:34 Report Abuse
rasigan து படமா இது...
Rate this:
mathanmathi - chennai,இந்தியா
22 மார், 2013 - 17:20 Report Abuse
mathanmathi படம் புள்ளா கோவம் வர மாதி காமடியா இருக்கு . டோடல் வேஸ்ட்.....
Rate this:
vinoth kumar - paris,பிரான்ஸ்
22 மார், 2013 - 02:15 Report Abuse
vinoth kumar படம் சூப்பர். ரசிக்க தெரியாத, செண்டிமெண்ட் ரசிகர்கள் ஹரிதாஸ் பார்க்கவும். இரண்டு மணி நேரம் ஜாலியாக சிரிக்க கூடிய படம்.
Rate this:
manimaran - coimbatore,ஹைட்டி
30 மார், 2013 - 15:16Report Abuse
manimaranசார் இந்த படத்தோட காமேடிய பாத்துட்டு நல்லா இருக்குதுன்னு சொல்றிங்களே நீங்க இதுக்கு முன்னாடி நல்ல காமேடிய பார்த்ததே இல்லையா . நீங்க நல்லா இருபிங்களா ?...
Rate this:
dinesh - chennai,இந்தியா
21 மார், 2013 - 11:51 Report Abuse
dinesh worst film in tamil cenima
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
19 மார், 2013 - 15:09 Report Abuse
Vaal Payyan கண்ணுகளா நாலு ஸ்கூல் பசங்க ... விந்தியா நடிச்சா ஒரு படம் இதே கதை தான் .. பேர் மறந்து போச்சு ....
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in