2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : சிட்டி லைட் பிக்சர்ஸ்
இயக்கம் : சுசீந்திரன்
நடிகர்கள் : ஜகவீர்(அறிமுகம்), மீனாட்சி கோவிந்தராஜ், பால சரவணன், லத்திகா பாலமுருகன், ஜெயபிரகாஷ், சிங்கம் புலி, அந்தோணி பாக்யராஜ், வினோதினி, ஜி பி முத்து.
இசை : டி.இமான்
வெளியான தேதி : 14.02.2025
நேரம் : 2 மணி நேரம் 7 நிமிடம்
ரேட்டிங் : 2.75/5

கதை சுருக்கம்

ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் நிறுவனத்தை நடத்தி வரும் ஜகவீர், மீனாட்சி கோவிந்தராஜ் இருவரும் குழந்தை பருவம் முதல் ஒன்றாக வளர்ந்து வருகின்றனர். ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் நல்ல நட்போடு பழகும் இவர்கள் ப்ரெண்ட்ஷிப்பிற்கு உதாரணமாக உள்ளனர். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, நெருங்கி பழகுவதால் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டு பெற்றோர் முடிவு செய்கின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது, இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா, அல்லது கடைசி வரை நல்ல நண்பர்களாக இருந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை.
90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை அனைவரும் கனெக்ட் செய்து கொள்ளும் கதை தான் இது.

படம் எப்படி இருக்கு
படத்தின் டைட்டில் 2 கே லவ் ஸ்டோரி என்று இருந்தாலும் முழுக்க முழுக்க நட்பின் ஆழத்தை பற்றி இயக்குனர் சுசீந்திரன் எடுத்துக் காட்டியுள்ளார். தற்போதுள்ள இளைஞர்கள், நட்பையும் - காதலையும் எப்படி வேறுபடுத்தி பார்க்கிறார்கள். எத்தனை விதமான காதல் இருக்கிறது. லவ் பிரேக்கப் மற்றும் லவ் பேட்ச் அப் என கரண்ட் யூத்களின் கன்டன்ட்டை கரெக்டாக கலந்து கொடுத்துள்ளார்.

ஹீரோவான ஜகவீர் 2 கே பையனாக அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு தனது முழு திறமையையும் காட்டி நடித்துள்ளார். ஹீரோயின் மீனாட்சி கோவிந்தராஜ் தற்போதைய ஜென் பெண்களின், நடை உடை பாவனைகள் மட்டுமின்றி அவர்களின் மனநிலையை பிரதிபலித்துள்ளார். நண்பர்களாக வரும் பால சரவணன், அந்தோணி பாக்யராஜ் ஆகியோர் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர். ஜெயபிரகாஷ், சிங்கம்புலி, வினோதினி ஆகியோர் தங்கள் கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளனர்.

ஆனந்த கிருஷ்ணன் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகிறது. தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் டை அழகாக திரையில் காட்சிப் படுத்தியுள்ளார். அதேபோல் டி. இமான் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் பிரமாதமாக உள்ளது.

பிளஸ் & மைனஸ்

2 கே கிட்ஸ் உலகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கி பழகுவதை காதல் என நினைக்காமல், பெற்றோர்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என அழகாக காட்டியுள்ளார். இருப்பினும் பெண்ணின் பெற்றோரை விட உடன் பழகும் நண்பனுக்கு தான் (பீரியட்ஸ் தேதி உட்பட ) எல்லா பர்சனல் விஷயங்களும் தெரியும் என்பது கொஞ்சம் ஓவர். பழைய 80 களில் அரைத்த மாவில் 2 கே தோசை சுட்டுள்ளார் சுசீந்திரன்.

2 கே லவ் ஸ்டோரி - பிரண்ட்ஷிப்

 

பட குழுவினர்

2கே லவ் ஸ்டோரி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓