Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ரயீஸ் (ஹிந்தி)

ரயீஸ் (ஹிந்தி),Raees
  • ரயீஸ் (ஹிந்தி)
  • ஷாரூக்கான்
  • நவாசுதீன் சித்திக்
  • மகிரா கான்
ஷாரூக்கான் நடிப்பில் ராகுல் தொலாக்கியா இயக்கியுள்ள படம் இது.
26 ஜன, 2017 - 12:38 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ரயீஸ் (ஹிந்தி)

சாராயம் விற்கும் தாதாவாக ஷாரூக்கான் நடித்து வெளியாகியுள்ள படம் தான் ‛ரயீஸ்'. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...

கதைப்படி, குஜராத் அருகேயுள்ள பதேபுரா எனும் ஊரில் தன் தாயுடன் வாழ்ந்து வருகிறார் ரயீஸ் எனும் ஷாரூக்கான். ரயீஸ்க்கு சின்ன வயதிலேயே பெரிய தொழிலதிபராக வேண்டும் என்பது ஆசை. ஆரம்பத்தில் ஒரு சின்ன ஒயின்ஷாப் கடையில் வேலைபார்க்கும் ரயீஸ், பின்னர் கள்ளச்சாராயம் உள்ளிட்ட தொழில்கள் எல்லாம் செய்து, ஒருக்கட்டத்தில் பெரிய சாராய சக்கரவர்த்தியாகவும், டானாகவும் வளருகிறார். ரயீஸை அடக்க ஏசிபி மஜ்ஜூம்தர் எனும் நவாசுதீன் சித்திக் வருகிறார். பிறகென்ன இவர்களுக்கு இடையேய நடக்கும் முட்டல் - மோதல் தான் மீதிக்கதை, அத்துடன் காதலின் மகிராவுடன் உடனான காதலையும் கலந்து ஒரு ஆக்ஷ்ன் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராகுல்.

ஷாரூக்கின் நடிப்பில் குறையொன்றுமில்லை. டானாக அவர் காட்டும் ஆக்ரோஷமும் சரி, காதலியுடனான காதலிலும் சரி, வழக்கம்போல் தான் ஒரு கிங் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

ஷாரூக்கானை போலே நவாசுதீன் சித்திக்கும் அவரை எதிர்க்கும் ஒரு பவர்புல்லான போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருக்கிறார்.

பாகிஸ்தான் நடிகையான மகிரா கானுக்கு படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வலுவான காட்சிகள் இல்லை.

ராம் சம்பத்தின் இசையில், ‛லைலா மெயின் லைலா...' போன்ற பாடல்கள் ரசிர்களை துள்ள வைக்கிறது. பின்னணி இசையும் ஓகே.

மோகனின் ஒளிப்பதிவும் ஓவியமாக இல்லாவிட்டாலும் ரசிக்க வைக்கிறது. தீபா பாத்யாவின் படத்தொகுப்பு பக்கா.

ராகுல் தொலாக்கியாவின் கதை, இயக்கம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் முதல்பாதி விறுவிறுப்பாக நகருகிறது, பின்பாதி சற்றே போரடிக்கிறது. நாம் ஏற்கனவே பார்த்த அதே, தாதா - போலீஸ் கதையாக இருப்பதால் ரயீஸ் படத்தில் புதிதாக ஒன்றும் இல்லை. ஷாரூக்கான் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள்.

மொத்தத்தில், ‛ரயீஸ் - நத்திங் சர்ப்ரைஸ்'



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in