அச்சமில்லை அச்சமில்லை (1984 ரிலீஸ்) - 13th CIFFசிறப்பு திரைவிமர்சனம்
நடிகர்கள் : ராஜேஷ், சரிதா
இயக்குநர் : கே பாலசந்தர்
நம் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவஞ்சலி படமாக இந்த ஆண்டு 13வது சென்னை திரைப்பட விழாவில், வடபழனி ஆர்கே வி திரையரங்கில் திரையிடப்பட்ட படம் தான் அச்சமில்லை அச்சமில்லை.
கே.பாலசந்தரின் இயக்கத்தில் 1984ம் ஆண்டு ராஜேஷ் - சரிதா ஜோடி நடித்து வெளிவந்த இப்படம், பிலிம்பேன்ஸ் அசோசியேஷன் விருது, தேசிய விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்றுள்ளது.
கொள்கை, லட்சியம் என பேசிய கணவன்., காசு, பணம், பதவியை பார்த்தவுடன் சந்தர்ப்பவாதியாக நடந்து கொள்வதும் பாதை மாறுவதும் கண்டு பொறுக்க முடியாது ... கொலைகாரியாக மாறுவது தான். ...அச்சமில்லை அச்சமில்லை படத்தின் மொத்த கதையும்!
அப்போதைய அரசியல் சூழ்நிலைகளை கிடைத்த கேப்பில் எல்லாம் கடும் கேலியும், கிண்டலும் அடித்து கே.பி உருவாக்கிய இப்படம், இன்றைய அரசியல் நிலைபாடுகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நன்கு பொருந்தும் படி இருப்பது தான் ஹைலைட்!
ராஜேஷ் - சரிதா இருவரது அந்த காலத்து நடிப்பிலும், கே.பியின் இயக்கத்திலும் அவருடைய படங்களுக்கே உரிய நாடகத்தன்மை சற்றே சலிப்பை தந்தாலும், இப்பெரும் நையாண்டி அரசியல் காவியம் மொத்தமாக திரையில் ஓடும் 2 மணி நேரம் 40 நிமிடம் போனதே தெரியாமல் போவதுதான் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் பெரிய ப்ளஸ்!