"விண்ணைத்தாண்டி வருவாயா" வெற்றிப் படத்திற்குப் பின் எஸ்.டி .ஆர் .எனும் சிம்பு - இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணி இணைந்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் படம் தான் "அச்சம் என்பது மடமையடா "
கதைப்படி ., இரண்டு தங்கைகள் இருந்தும் பெண்களின் மனதை சரியாக புரிந்து கொள்ள முடியாததால் சிம்புவின் வாழ்க்கை சரியான காதலும் , காதலியும் இன்றி போராக போகிறது... பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக ஒரு நாள் ., சிம்பு தங்கையின் வெளியூர் கல்லூரி தோழி மஞ்சிமாமோகன் ., ஒரு வேலை விஷயமாக சில நாட்கள் சிம்பு வீட்டில் வந்து தங்குகிறார். அவரை பார்த்த உடனேயே சிம்புவுக்கு காதல், நாயகிக்கும் கிட்டத்தட்ட அப்படியே . இந்நிலையில் நாயகியுடன் அதிர்ஷ்டவசமாக தன் பைக்கிலேயே தென் இந்தியா முழுக்க டூர் கிளம்பும் சிம்பு ., நாயகி யுடன் ஒரு விபத்தில் சிக்குகிறார். அதிலிருந்து மீள்வதற்கு முன் ., அது விபத்தல்ல ... நாயகியையும் அவர் குடும்பத்தையும் குறிவைத்து நடத்தப்படும் கொடூர தாக்குதல் என கண்டுனரும் சிம்பு நாயகிக்காக ஆக்ஷன் கோதாவில் குதித்து விரோதிகளை வென்று ., காதலியை கரம் பிடித்தாரா ? இல்லையா ...? என்பது தான் "அச்சம் என்பது மடமையடா " படத்தின் கரு , கதை, களம் , காட்சிப்படுத்தல் எல்லாம் .
ரஜினிகாந்த் முரளிதரன் எனும் எஸ்.டி.ஆர் அலைஸ் சிம்பு மீண்டும் பழைய பார் மிங்கில் பக்காவாய் பட்டையை கிளப்பி இருக்கிறார். யெஸ் .,
"வாழ்க்கையிலேயே நிறைய பார்த்துட்டு சாகுறது தான் கஷ்டம் ... ஒண்ணுமே பார்க்கம சாகலாம் ... " என பைக்கை யூ டர்ன் அடித்து சிங்கங்களை அதன் குகைகளிலேயே சந்திக்க திரும்பும்
சிம்பு ஆக்ரோஷம் என்றால் ., "சிட்டியில இது மாதிரி யார் வீட்டுலயாவது இரத்திரி தங்குறோமுன்னு கேட்டா போலீஸைக் கூப்பிடுவங்கள்ள ... ஏன்னா ... அவங்கள்ளாம் மூளையிலருந்து யோசிக்கிறாங்க ... இவங்கள்ளாம் இதயத்திலிருந்து ....யோசிப்பாங்க "என்பதில் காதல் நாயகனாய் இதயம் தொடுகிறார்.வாவ் . மீண்டும் எனர்ஜி பூஸ்டராய் சிம்பு. கீப் இட் அப் எஸ் டி ஆர்.
கதாநாயகி லீலா எனும் , மஞ்சிமாமோகன் குடும்ப பாங்கில் கச்சிதம்.
மற்றும் காமத் தாக வரும் பாபா சேகல், ராமன் எனும் நாகி நீடு .வி , மகேஷாக வரும் சதீஷ் , மகேஷின் தந்தையாக வரும் ஆர் என் ஆர் மனோகர் , அதுல்லாக வரும் கிரிஷ் , டாக்டர் யஸ்வந்த் ட்ரிப்யூட்டாக வரும் பிரசாத் அத்தலை , முரளிதரனாக வரும் வர்கீஸ் மாத்தியூ உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் டேன்மெக்கார்தர் & டேனி ரேமண்ட் ஆகிய இரட்டையரின் பணி செம . ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் "சோக்காலி காட்டும் திறமை எல்லாம் வெற்றி ..",
"இது நாள் வரை உலகில் எதுவும் அழகில்லை என்பேன் .. ",
"முதலில் யார் சொல்வது ...பறக்கும் தார்சாலையே நீ சொல் ...",
"அவளும் நானும் அமுதும் தமிழும் .. " உள்ளிட்ட பாடல்களும் , பின்னணி இசையும் பிரமாதம்.
கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் "தப்பா எதுவும் செய்யாமல் தப்பா நினைச்சிட்டாங்கண்ணா தப்பாயிடுமுல்ல ... " உள்ளிட்ட ரொமான்டிக் வசனங்களுடன் முன்பா தி ரொமான்டிக்காகவும் , பொயடிக்காகவும் ரசிகனைக் கவரும் "அச்சம் என்பது மடமையடா .. " பின்பாதி முழுக்க , முழுக்க ஆக் ஷன் சேற்றில் சிக்கி இரத்த களறியாக ரசிகனை பயமுறுத்துவது சற்றே உறுத்தல்!
மற்றபடி ., சிம்புவின் கேரக்டர் பெயரை கடைசி வரை படத்தில் யாரும் பிரயோகிக்காமல் ., இறுதியில் அவரது பெயர் ரஜினிகாந்த் என அவரது அப்பாவால் உச்சரிக்கப்படுவதையும் ., சிம்புக்ளைமாக்ஸில் போலீஸ் அதிகாரியாக வருவதும் ...,சிம்புவிபத்தில் சிக்கி ., சாகக் கிடக்கும் போது நாயகியை பார்த்து ஐ லவ் யூ என்பதும் ., நாயகி குண்டடிபட்டு சாகக் கிடக்கும் போது வ லவ் யூ என்பதையெல்லாம் யூத் பட்டாளம் பெரிதாய் ரசிக்கும் என்பது இப்படத்தின் பெரும் பலம்!
ஆக மொத்தத்தில் ., "அச்சம் என்பது மடமையடா " - "கெளதம் - சிம்பு கூட்டணியின் அசத்தல் படமடா ..." என்று சொல்லத்தான் ஆசை! ஆனால் , முழுதாக முடியவில்லை!