பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'தக் லைப்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன், சிம்பு முதல் முறையாக இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.
கமல்ஹாசன் ஒரு தலைமுறை, சிம்பு அதற்கடுத்த தலைமுறை. இருவருமே குழந்தை நட்சத்திரங்களாக நடித்து கதாநாயகர்களாக உயர்ந்தவர்கள். இவர்களுடன் மாறுபட்ட காம்பினேஷனாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் சிம்பு பேசுகையில், “இந்தியாவில் இருந்து வந்துள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் படம் எனக்கு கனவு மாதிரி. மணி சார், ஏஆர் ரஹ்மான் சார், கமல் சார், ரவி கே சார் அவங்க படங்களைப் பார்த்து அவங்க கூட படம் பண்ணனும்னு தோணும். இந்தப் படத்துல அவங்க எல்லார் கூடயும் சேர்ந்து இந்தப் படம் பண்றது ஒரு கனவுதான். கமல் சார் ஆன் ஸ்க்ரீன்ல என்னோட குரு.
படப்பிடிப்பு சமயத்துல ஆரம்பத்துல ரொம்ப கஷ்டமா இருந்தது. இதுக்கு முன்னாடி மணி சார் கூட 'செக்கச் சிவந்த வானம்' படத்துல நடிச்சேன். அப்பவும் ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அப்புறம் அவர் கூட எப்படி பணி புரியறதுன்னு புரிஞ்சி, நடிக்க ஆரம்பிச்சேன்.
ஆனால், இந்தப் படத்துல மணி சார், கமல் சார் அவங்க கூட சேர்ந்து நடுவுல நிக்கறது கூட சிரமமா இருக்கும். என்ன பண்றதுன்னு தெரியாது. கமல் சாருக்கு நன்றி. சின்ன வயசுல இருந்து நான் குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கேன். அவருடைய படங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். அவர் கூட சேர்ந்து நடிச்சது அருமையான தருணம். எனக்கு ஊக்கமளிச்சாரு, ஆதரவா இருந்தாரு. அவர் பக்கத்துல எனக்கு ஒரு இடம் கொடுத்திருக்காரு. அது அவருடைய பெருந்தன்மையக் காட்டுது.
இந்தப் படம் நிச்சயம் வித்தியாசமான முயற்சி. ஜீனியஸ் மணி சார் அதை பண்ணியிருக்காரு. 'நாயகன்' படத்துக்கப்புறம் மணி சார், கமல் சார் மீண்டும் இணைஞ்சிருக்காங்க. ஒரு ரசிகரா நானும் ஆர்வமா காத்திருக்கேன்.
அசோக் செல்வன், த்ரிஷா கூட நடிச்ச எல்லாருக்கும் நன்றி. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்துக்குப் பிறகு நாங்க ரெண்டு பேரும் எப்ப சேர்ந்து நடிப்போம்னு பலர் கேட்டதா த்ரிஷா சொன்னாங்க. இது ரெண்டு பேருக்குமே ஒரு மாறுபட்ட படமா இருக்கும்.
அசோக் செல்வன் நல்ல நண்பர், சகோதரர். அவருடைய வேலைகள் பிடிக்கும். அவருக்கு போன் பண்ணி நல்ல படங்கள் பண்ணுங்கன்னு வாழ்த்துவேன். ஜோஜு சாருக்கும் நன்றி.
ரகுமான் சார் என்னோட குரு. அற்புதமான இசை கொடுத்திருக்கு. ஆடியோ சீக்கிரமே வெளியாகும்,” என்றார்.