Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

இவன் மரியாத ராமன் (மலையாளம்)

இவன் மரியாத ராமன் (மலையாளம்),Ivan Mariyatha raman (Malayalam)
 • இவன் மரியாத ராமன் (மலையாளம்)
 • திலீப் (மலையாளம்)
 • நிக்கி கல்ராணி
 • இயக்குனர்: சுரேஷ் திவாகர்
12 ஏப், 2015 - 10:44 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » இவன் மரியாத ராமன் (மலையாளம்)

தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஹிட்டடித்த ஒரிஜினலான 'மரியாத ராமண்ணா' படத்தை, மலையாளத்திற்கு ஏற்றமாதிரி லைட்டாக பட்டி, டிங்கரிங் பண்ணி 'இவன் மரியாத ராமன்' என்கிற பெயரில் கலர் கோட்டிங் கொடுத்திருக்கிறார்கள்..


புனேயில் சைக்கிளில் மூட்டை சுமந்து சம்பாதிக்கும் திலீப்புக்கு, மினி ஆட்டோ வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதற்கான பணத்திற்காக முழிக்கும் நேரத்தில், கேரளாவில் உள்ள தங்களது கிராமத்தில் அவரது தந்தை தனக்காக டெபாசிட் செய்துவைத்த மூன்று லட்ச ரூபாய் இருப்பது தெரியவருகிறது.


இன்றைய மதிப்பில் முப்பது லட்சம் பெறுமானமுள்ள அந்த தொகையை அதை பெறுவதற்காக கிராமத்துக்கு கிளம்புகிறார். போகும் வழியில் ரயிலில் பழக்கமாகும் அதே ஊரைச்சேர்ந்த நிக்கி கல்ராணியின் நட்பை வைத்து, கிராமத்தில் இருக்கும் அவரது தந்தையின் உதவியுடன் அந்த பணத்தை பெற முயற்சி செய்கிறார் திலீப். ஆனால் தன்னை கொலை செய்ய முப்பது வருடங்களாக வெறியோடு காத்திருக்கும் குடும்பம் அது என்பது அந்த வீட்டிற்குள் போனபின்னர் தான் திலீப்பிற்கு தெரியவருகிறது.


எதிரியாக இருந்தாலும் விருந்தாளியாக வந்தவரை தங்களது வீட்டில் வைத்து கொல்வதில்லை என்பது அந்த குடும்பத்தின் கொள்கை.. அதனால் திலீப்பை வீட்டைவிட்டு வெளியேறவைத்து பழிதீர்க்க திட்டமிடுகின்றனர். இதிலிருந்து திலீப் எப்படி புத்திசாலித்தனமாக தப்பிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.


தெலுங்கு, தமிழில் காமெடி நடிகர்கள் முயற்சி செய்ததை, மலையாளத்தில் ஹீரோவாக இருக்கும் திலீப் முயற்சி செய்திருக்கிறார். வழக்கமாக திலீப் இதுபோன்ற கதைகளுக்கு அப்படியே பிட் ஆகக்கூடியவர் என்பதால், படம் முழுவதும் மரியாத'ராமன்'ஆகவே வலம் வருகிறார். சொல்லப்போனால் தன்னுடைய முழு சுவாசத்தையும் தனது கேரக்டரில் செலுத்தியிருக்கிறார் திலீப். வழக்கமான திலீப்பாக ஆங்காங்கே தனது ஆட்டத்தை ஆடினாலும் தேவையான இடங்களில் மற்றவர்களை ஆடவிட்டு அண்டர்பிளே செய்யவும் தவறவில்லை.


புதுவீட்டிற்கு பெயின்ட் அடித்ததுபோல பளிச்சென படம் முழுவதும் அழகுராணியாக வலம் வரும் நிக்கி கல்ராணி, ஜாடிக்கேத்த மூடிபோல திலீப்பிற்கு ஏற்ற சரியான ஜோடியாக பொருந்துகிறார். குறிப்பாக தமிழ் வெர்ஷனில் சரியாக உருவகப்படுத்தப்படாத காதல் எபிசோட் இதில் மயிலிறகாய் வருடுகிறது என்றால் அதற்கு நிக்கியின் அழகு முகமும் நடிப்பும் தான் காரணம்.


படத்தின் மிகப்பெரிய பலம் தமிழ், தெலுங்கில் தான் ஏற்று நடித்த அதே ஜமீந்தார் கேரக்டரில் நடித்திருக்கும் நாகிநீடுவின் உயிர்ப்பான நடிப்புதான். மனிதர் எப்படித்தான் சலிப்பு தட்டாமல் இத்தனை மொழிகளிலும் அற்புதமாக நடிக்கிறாரோ..? நிக்கியின் முறைப்பையனாக வரும் கைலாஷும் தன் பங்கிற்கு கலகலப்பூட்ட தவறவில்லை. அட.. நம்ம வடிவுக்கரசியா இது என ஆச்சர்யப்பட வைக்கிறார் ஜமீன்தாரின் அம்மாவாக நடித்திருக்கும் வடிவுக்கரசி.


மலையாளத்திற்காக மாற்றப்பட்டதில் நிக்கி கல்ராணியின் காதல் எபிசோட் படத்திற்கு பிளஸ் ஆகியுள்ளது என்றால், தமிழில் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் சந்தானம், ராஜகுமாரன் ட்ரெய்ன் காமெடி எபிசோட் ஹைலைட்டாக இருந்தது இதில் ரொம்பவே மிஸ் ஆகியிருக்கிறது. அந்த ஏரியாவை கொஞ்சம் கவனித்திருக்கலாம். தங்கள் வீட்டுப்பெண் தண்ணீரில் குதித்ததும், அப்பா, அண்ணன்கள், அடியாட்கள் உட்பட அனைவருமே பதறிக்கொண்டு நிற்க, ஹீரோ மட்டும் காப்பற்றுவதற்காக தண்ணியில் குதிப்பதாக க்ளைமாக்சுக்காக வைக்கப்பட்டாலும் அந்த ஒரு லாஜிக் தான் எல்லா மொழிகளைப்போல இதிலும் இடிக்கிறது.


கோபிசுந்தரின் இசையில் உருவான அழகான பாடல்களை அம்சமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாத். ஏற்கனவே தமிழ், தெலுங்கில் வெற்றிபெற்ற படம் என்கிற பலத்துடன் களம் இறங்கியுள்ள அறிமுக இயக்குனர் சுரேஷ் திவாகர், அதை மலையாளத்திற்கு ஏற்றமாதிரி விறுவிறுப்பாக ஜனரஞ்சகமாக மாற்றியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in