தினமலர் விமர்சனம்
அப்பா டி.ஆரும், அம்மா உஷா டி.ஆரும் இணைந்து தயாரிக்க, தம்பி குறளரசனின் இசையில் சிம்பு தனக்கு பிடித்த நயனுடன்(கூடவே ஆண்ட்ரியாவும் இருக்க..) ஜோடி சேர்ந்து நடிக்க, பசங்க பாண்டிராஜின் இயக்கத்தில் நீண்டகால தயாரிப்பில் இருந்து ஒரு வழியாக வெளி வந்திருக்கும் திரைப்படம் இது நம்ம ஆளு.
ஐ.டி இளைஞர் சிவாவுக்கு, சொந்த ஊரான திருவையறில் மைலா அலைஸ் அம்முவை பெண் பார்த்திருகின்றனர். பெண் பார்க்கும் படலத்தின் போதே சிவாவின் மாஜி காதல் பற்றி தெரிந்து கொண்டு கேட்கும் மைலா, சிவாவின் வாழ்க்கைக்குள் வந்தாளா? இல்லை சிவாவின் மாஜி பிரியாவே சிவாவிற்கு பிரியமானவள் ஆனாரா ..? என்பது தான் இது நம்ம ஆளு படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம் !
சிவாவாக சிம்பு வழக்கம் போலவே வம்பாகவும், அன்பாகவும் வாழ்ந்திருக்கிறார். ஆம்பளைங்க மனசை கடவுள் தயார் பண்ணியிருக்கார்... பொண்ணுங்க மனசை சைனாக்காரன் தயார் பண்ணியிருக்கிறான் போல... என புலம்புவதில் தொடங்கி, எல்லோரும் என் லவ்வ வச்சு காமெடி பண்றீங்க என் பீலிங் எனக்கு மட்டும் தான் தெரியும் எனும்போது ரசிகனை கண்ணீர்... விட வைப்பது வரை... சிம்பு, தம் நடிப்பில் தன்ரியல்லைப்பையும் கலந்து, உதாரணத்திற்கு, சும்மா காதல், காதலின்னு சுத்துவது... என் தப்பு இல்ல... என் ஹார்மோன் தப்பு... என்பது உள்ளிட்டவைகளை ரியல் மேட்டர்களை டயலாக்குகளாக கலந்து கலர்புல்லாக கலக்கி யிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். வாவ், ஹேட்ஸ் ஆப் சிம்பு!
நான், இவ தான் பொண்ணுன்னு முடிவு பண்ணிட்டா மத்த எல்லோரும் கேட்டுக்கு வெளியே தான்.... என காதலி பற்றி பன்ச் அடிப்பதிலும் சரி, ஒரு காட்சியில், எனக்கு நடிக்கத் தெரியாது சார்... எவனெவனோ நடிக்கிறான்... என போட்டியாளர்களை பந்தாடி பன்ச் வைத்து ஆதங்கப்படுவதிலும் சரி... எல்லாவற்றிலும் சிம்பு ரொம்பவும் ஒப்பன் டாக்காக டயலாக் அடித்திருப்பது ஹைலைட்.
நயன்தாராவும் உடன் நடிப்பது சிம்பு என்பதாலோ, என்னவோ மிகவும் நச்தாராவாக படம் முழுக்க பக்காவாக பளிச்சிட்டிருக்கிறார். ப்ரியா கிட்ட சொன்ன அந்த ப்ரியாவுக்கு முந்தைய லவ்வர் யாரு . .? என சிம்புவை மாஜிகள் பற்றி கேட்டு தொந்தரவு பண்ணுவதில் தொடங்கி, கல்யாணம் ஆன பின் முதல்ல என்ன எங்க கூப்பிட்டு போவ? என சிம்புவிடம் கேட்டு "பெட்ரூமுக்கு தான்... " எனும் சிம்பு பதிலால் சினுங்குவது வரை சகலத்திலும் மற்ற ஹீரோக்களைக் காட்டிலும் சிம்புவிடம் நயன் அதிக நெருக்கம், கிறக்கம் காட்டி நடித்திருக்கிறார் என்றால் மிகையல்ல!
ப்ரியாவாக, ஆண்ட்ரியா நயன் என்ட்ரிக்குப் பின் தியாகியாக தெரிகிறார். நயனுக்காக சிம்புவை ஜெய்யுடன் வந்து சிம்புவை சமாதானம் செய்வதெல்லாம் சினிமா டிக்காக இருக்கிறது.
சிம்புவின் பால்ய காலந்தொட்ட நண்பராக அவரது டூ-வீலர் டிரைவராக சூரி செம சூப்பர்ரி... எனும் அளவிற்கு சிம்புவுடன் சேர்ந்து படம் முழுக்க படத்தோடு ஒட்டிய காமெடியில் பட்டைய கிளப்பி இருக்கிறார்.
உனக்கு பொண்ணுங்க கிட்ட என்ன பிடிக்கும் ? என நயன் போனில் சிம்புவிடம் கேட்க, இதை காதில் வாங்கும் சூரி, சைடில் அவனுக்கு பொண்ணுங்கன்னு எதிலாவது எழுதினாலே பிடிக்கும்... என வாய்ஸ் கொடுப்பதில் தொடங்கி, லாலி பாப் கிப்ட கல்யாணம் ஆகி பத்து புள்ள பெத்துக்கணும் அதுல முதல்ல ஆம்பள புள்ள... அதுக்கு, ஆர்யா, தனுஷ்... இதுல ஏதாவது ஒரு பேர் வைக்கணும் எனும் நயனையும், இல்ல, இல்ல முதல்ல உன்னை மாதிரி ஒரு பெண் பிள்ளை... அதற்கு ஐஸ்வர்யா, ஸ்ருதி, ஆர்த்தி இப்படி ஏதாவது ஒரு பேரு வைக்கணும் என பியூச்சர் பேசும் இருவரையும் பார்த்து, பாருங்க 2 பேரும் அவங்கவங்க எக்ஸ் லவ் பேரா பார்த்து செலக்ட் பண்ணிட்டிருக்கிறதை... என கலாய்ப்பது வரை... சூரி சீன் பை சீன் காமெடியில் கலக்கி இருக்கிறார். இப்படியே பாதாம், முந்திரியா திண்ணு, பத்து பிள்ளைக்கு மேலயே பெத்துக்கலாம் என்றும் காலை 5-30 மணிக்கு எழும்புற பிள்ளைய, அதே காலை 5.30 மணிக்கு தூங்க அனுப்புறியே... இது நியாயமா ? எனும் டபுள் மீனிங் டயலாக்குகளிலும் சூரி காமெடியை காட்சிக்கு காட்சி வாரி இறைத்திருக்கிறார்.
கெஸ்ட் ரோலில் வந்து போகும் ஜெய், சந்தானம் தொடங்கி, சிம்புவின் அப்பாவாக வரும் ஜெயபிரகாஷ், நயனின் அம்மாவாக வரும் மகேஸ்வரி, மற்றும் அப்பா நடிகர் உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம். அதிலும், என் மகன் ஏதாவது பெண் விஷயத்தில் பேசப்படலைன்னா தான் ஆச்சர்யம் எனும் ஜெ.பி படம் முழுக்க நமக்கு இப்படி ஒரு அப்பா இல்லையே... என ரசிகனுக்கு ஏங்க வைக்கும் ஹேப்பி.
டி.ஆர்.குறளரசனின் இசையில், இது நம்ம ஆளுன்னு மாமன் வெயிட்டிங் ..., எனக்காக பொறந்தாலே... , என் காத்தாக வந்த பொண்ணு மூச்சாக நீன்னாலே... உள்ளிட்ட பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி செமமிரட்டல். புலிக்கு பிறந்தது பூனையாகுமா.?!
பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு கண்களில் ஒற்றிக் கொள்ளும் ஓவியப் பதிவு. பிரவின்.கே.எல். & ப்ரேம் நவாஸின் படத்தொகுப்பு, சிம்பு - நயனின் காதல் தொல்லை பேசி உரையாடல்கள் மற்றும் சம்பந்திகளின் சண்டை சச்சரவு காட்சிகள் தவிர்த்து மற்றவற்றில் பக்தா பற்றுதல் தொகுப்பு.
அப்படியே ஒரு புல் அடிச்ச மாதிரி இருக்குடா..., கல்யாணம் பண்ணிப் பார் பேய் அடிச்ச மாதிரி இருக்கும்..., உங்க மூலமா ஒரு கால் கட்டு போட்டுக் கலாமுன்னு பார்த்தேன்... எனக்கு ஆனா வாய்க்கட்டு போட்டுட்டீங்க...., டைட்டானிக் படத்துல பிடிச்ச சீன் .. அந்த கார் சீன் தான்... எனும் கிஸ், கிக், உரையாடல், ஜெ.பி, சம்மந்தி வீட்டுக்கு போன் போட்டு என் பிள்ளை கிட்ட பேசணும்... ஆறு மணி நேரமா ட்ரை... பண்றேன் உங்க பொண்னை கொஞ்ச நேரம் லைன் கட் பண்ண சொல்லுங்க... எனும் கிரியேட்டிவிட்டி, சிம்பு - நயன் ஒரே ஜோடி மூன்று முறை திருமணம் செய்து வருஷத்திற்கு மூன்று வெட்டிவ் ஆன்வைசரி கொண்டாடும் களேபரம் எல்லாம், இயக்குனர் பாண்டிராஜ் டச்சில் பக்காவாக பளிச்சிட்டுள்ளன. இது எல்லாவற்றுக்கும் மேல், இயக்குனர் பாண்டிராஜ், க்ளைமாக்ஸில் உங்க இரண்டு பேரையும் வச்சு ஒரு வழியா படத்தை முடிச்சுட்டேன்... என எஸ்கேப் ஆகும் இடத்தில் தான் ஒரு பெரிய இயக்குனர் என ப்ரூ செய்திருப்பது ஒன்று போதும் இது நம்ம ஆளு படத்தின் வெற்றிக்கு வித்திடுவதற்கு வாவ்!
மொத்தத்தில், சிம்புவும், நயனும் போனில் அடிக்கடி கடலை போட்டு போரடிக்கும் இழுவை காட்சிகள் சில இடங்களில் தென்பட்டாலும், நிச்சயம் இது நம்ம ஆளு - ரசிகனுக்கு பிடிச்ச ஆளு" தான்!