
விமர்சனம்
தயாரிப்பு : ஸ்டுடியோ மூவிங் டேர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ்
இயக்கம் : ராம் இந்திரா
நடிகர்கள் : கபில் வேலவன்,குணவந்தன் , அர்ஜுன் தேவ் சரவணன்,தக்ஷா,சாம்பசிவம்
வெளியான தேதி : 30.5.2025
நேரம் : 2 மணி நேரம் 15 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5
கதைக்களம்
திண்டுக்கலில் நடைபெறும் திருவிழாவின் போது இரவில் 6 நண்பர்கள் சேர்ந்து ஜாலியாக மது அருந்துகிறார்கள். திடீரென்று அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு அதில் ஒருவர் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறார். அவரது உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு பிரச்சனையில் இருந்து தப்பிக்க மற்றவர்கள் முடிவு செய்கிறார்கள். அவர்களது முடிவு அவர்களுக்கு எத்தகைய பிரச்சனையை தேடிக் கொடுத்தது என்பதை வித்தியாசமான பயணமாக சொல்ல முயற்சித்திருப்பதே 'மனிதர்கள்' படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.
நண்பர்களுக்கிடையே உள்ள நெருக்கம், பதட்டம், மன அழுத்தம் என ஒரு நேர்த்தியான திரில்லர் திரைப்படத்தை இயக்குனர் ராம் இந்திரா ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். ஒரு இரவில், ஆறு நண்பர்களுக்குள் நடக்கும் கதையை மர்மமான திரில்லர் பேட்டனில் கதை சொல்லியிருக்கிறார். பெண்களே இல்லாமல் முழுக்க முழுக்க ஆண்களை மட்டும் வைத்து படம் எடுத்திருப்பது மற்றொரு சிறப்பு.
படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கும் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் உணர்ச்சி பொங்க நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் வெவ்வேறு குணாதிசயங்கள் இருக்கும் என்பதை மிக கச்சிதமாக தங்களது நடிப்பின் மூலம் இவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அஜய் அபிராம் ஜார்ஜ், குறிப்பிட்ட ஒரு சில புதுமுக நடிகர்களை வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க இரவு நேரத்தில் கேமராவை இயக்கி சவாலான பணியை மிக சாமர்த்தியமாக செய்திருக்கிறார். அனிலேஷ் எல். மேத்யூ இசையில் பாடல்கள் சுமாராக இருந்தாலும், பயம் மற்றும் பதற்றத்தை பின்னணி இசை மூலம் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.
பிளஸ் & மைனஸ்
கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் ஜானரை மிக எளிமையான முறையில் அதேசமயம் வித்தியாசமான கண்ணோட்டத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரது வித்தியாசமான முயற்சி விபரீதமாக மாறி படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்துவிட்டது. படம் முழுவதுமே இருள், ஒரே முகங்கள், அவர்களுக்கு இடையே நடக்கும் சண்டை என ஒரே மாதிரியான காட்சிகள் வருவதால், கதை ஒரே இடத்தில் பயணிப்பது போன்ற சோர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.
மனிதர்கள் - முகமூடி அணிந்தவர்
மனிதர்கள் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
மனிதர்கள்
- இயக்குனர்