விமர்சனம்
அ நிறம் | அளவு
99 வீடுகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் 66வது எண் வீட்டை வாங்கி கணவருடன் வசிக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி. எதிரே உள்ள 99வது பிளாட்டில் வசிக்கும் ஸ்வேதாவுடன் ரச்சிதாவுக்கு நல்ல நட்பு ஏற்படுகிறது. ஒருநாள் ஸ்வேதாவை அவர் கணவர் கொலை செய்ய முயற்சிப்பதாக உணரும் ரச்சிதா இது பற்றி பிளாட்வாசிகளிடம் சொல்ல, 99வது வீட்டில் யாருமே வசிக்கவில்லை என்கிறார்கள். பிளாட் ஓனரான மூர்த்தியிடம் இது பற்றி விசாரிக்க, அந்த பிளாட்டில் என் மகள் வசித்தார். கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சம்பந்தப்பட்டவனை நான் கொல்ல நினைக்கிறேன். என்னையும் தடுக்கிறாள். உன்னிடம் அவள் ஏன் பேசுகிறார் என எனக்கு தெரியவில்லை என அவர் கூற, அடுத்து என்ன நடக்கிறது. ஸ்வேதா இறந்தது எப்படி? ரச்சிதாவை கொல்ல நினைக்கும் அவர் கணவரின் திட்டம் பலித்ததா? இதுதான் 99/66 படக்கதை. எம்.எஸ்.மூர்த்தி இயக்கி, நடித்து, இசையமைத்து படத்தை தயாரித்து இருக்கிறார்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, எதிரெதிர் வீடு. இரண்டு பெண்கள், ஒரு பெண்ணின் உடலில் புகும் இன்னொரு பெண் ஆவி என கதை வித்தியாசமாக இருக்கிறது. சின்னத்திரையில் பிரபலமான ரச்சிதா கதைநாயகியாக நடித்து இருக்கிறார். பல சீன்களில் ஹோம்லியாக , அழகாக இருக்கிறார். பேய் உடலில் புகுந்தபின் நடிப்பில் மிரட்டுகிறார். ஆனாலும், அவருக்கான காட்சிகள், வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. அவரை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும். தயாரிப்பாளர், இயக்குனரான எம்.எஸ்.மூர்த்தியே நடித்தும் இருப்பதால் கதையில் அவருக்கு நிறைய முக்கியத்துவம். ரச்சிதா எதிர்வீட்டில் வசித்து பேய் ஆன ஸ்வேதா அப்பாவாக அவர் வருகிறார். படத்தின் இடைவேளைக்குபின் அப்பா, மகள் பாசக்காட்சிகள், ஸ்வேதா சம்பந்தப்பட்ட காட்சிகள், அவருக்கும், கணவருக்குமான பிரச்னை என கதை நீள்கிறது. அதில் பல விஷயங்கள் நாடகத்தனமாக இருக்கிறது. ஸ்வேதா நடிப்பு ஓகே என்றாலும், பல இடங்களில் சீரியல் நடிகை மாதிரி முகபாவம் காண்பிக்கிறார்.
பெண் சாமியாராக கே.ஆர்.விஜயா வந்து ஆச்சரியம் அளிக்கிறார். இன்னொரு சித்தராக தயாரிப்பாளர் தேனப்பன் வருகிறார். இந்த இடங்கள் ஓரளவு ஆறுதல். ரச்சிதா கணவராக சபரியும், ஸ்வேதா கணவராக ரோஹிந்தும் வருகிறார்கள். இவர்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. இவர்களும் சீரியல் நடிகர்கள் மாதிரியே இருக்கிறார்கள். பல இடங்களில் இயக்குனர் மூர்த்திக்கு முக்கியத்துவம், அவருக்கு ஓபனிங் பாடல், கிளைமாக்ஸ் பாடல் வேறு. அவரே தயாரிப்பாளர் என்பதால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அவருக்கு பதில் வேறு யாராவது நடித்து இ ருந்தால் படம் இன்னும் கொஞ்சம் பேசப்பட்டு இருக்கும்.
பாடல்களில் விநாயகர் பாடல், கிளைமாக்ஸ் கருப்பசாமி பாடல் ஓகே ரகம். புத்தரை வழிபடுபவராக ஸ்வேதாவை காண்பித்து, புத்தமதம் சம்பந்தப்பட்ட காட்சிகள், பாடல்களை சேர்த்து இருக்கிறார்கள். உண்மையில் அந்த விஷயங்கள் கதையுடன் அவ்வளவாக ஒட்டவில்லை. மெட்லி ஒலி சீரியல் புகழ் சேவிலோ ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அது ஓரளவு திருப்தி. நிறைய நடிகர்கள் வந்து போகிறார்கள். யாரும் மனதில் நிற்கவில்லை. தான் பட்ட கஷ்டத்தை இன்னொரு பெண் படக்கூடாது. தனக்கு ஏற்பட்ட நிலை அவருக்கு வரக்கூடாது என்று நினைக்கும் பேய், அதற்காக சில வேலைகளை செய்வது ரசிக்க வைக்கிறது. புத்த மதம் சம்பந்தப்பட்ட இடங்கள்,அன்பு பற்றி சொல்லும் இடங்கள் டச்சிங்.
ஆனாலும் பேய் கதை என்றாலும் பழிவாங்கும் விஷயத்தில் அழுத்தம் இல்லை. பல சீன்களில் சுவாரஸ்யம் இல்லை. ரச்சிதாவை சரியாக பயன்படுத்தவில்லை. நிறைய செலவு செய்து இருந்தாலும் கதையில் விறுவிறுப்பு இல்லை.
99/66 - பேய் படம்தான் ஆனா பயமில்லை

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!