Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

டமால் டுமீல்

டமால் டுமீல்,Damaal Dumeel
19 ஏப், 2014 - 23:10 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » டமால் டுமீல்

தினமலர் விமர்சனம்


மங்காத்தா வைபவ் ஸோலோ ஹீரோவாகவும், அவருடன் பை பை பை கலாச்சி பை... எனும் அழகான குரலுக்கு சொந்தக்காரரான ரம்யா நம்பீசனும் ஜோடி சேர்ந்து நடித்து வெளிவந்திருக்கும் க்ரைம் திரில்லர் காமெடி படம்தான் டமால் டுமீல்!


திருமணத்திற்கு காத்திருக்கும் தங்கை, தங்கள் காதலுக்கு சம்மதம் வாங்கிவிட்ட சந்தோஷத்தில் தன் பெற்றோரை வந்து சந்திக்க சொல்லி காத்திருக்கும் காதலி, புருஷன் நிறைவேற்றாமல் விட்டுச் சென்ற கனவுகளை எல்லாம் கண்முன் நிறுத்துவான் பிள்ளை என எதிர்பார்த்திருக்கும் தாய்... இவர்களுக்காக கை நிறைய சம்பளம் வாங்கும் ஐடி இளைஞன் ஒருத்தனுக்கு, ஒருநாள் டமால் என வேலை பறிபோகிறது. அதேநாளில் அவன் வீட்டு வாசலில் அழகாக பேக் செய்யப்பட்ட ஓர் அட்டை பெட்டியில் 5 கோடி ரூபாய் பணம் கிடைக்கிறது. அந்தப்பணத்தை தனதாக்கி கொள்ள அந்த இளைஞன் எடுக்கும் டுமீல் முடிவுகள் தான் டமால் டுமீல் படத்தின் மொத்தகதையும், களமும்!


சதாசர்வ நேரமும் ராசிபலனை நம்பும் வித்தியாசமான பாத்திரத்தில் காஸ்ட்லீ ஐடி இளைஞன் மணிகண்டனாக கச்சிதமாக பொருந்துகிறார் வைபவ். வேலை பறிபோனதும் வீட்டு வாசலில் கிடக்கும் 5 கோடிக்காக அவர் எடுக்கும் அதிரடி முடிவுகள் அதிர்ச்சி ரகம் என்றாலும், நம்மால் முடியாததை செய்யும் ஹீரோக்களையே பார்த்து பழகிய நமக்கு பெரிதாக பாதிப்பு ஒன்றுமில்லை! ஆனால் 4 பிணங்களையும், அதை சுமந்திருக்கும் பெட்டிகளையும் ஒற்றை ஆளாக கூவத்தில் கட்டி இறக்குவதெல்லாம் கொஞ்சம் ஓவருங்கோ!


வைபவ்வின் காதலி மீராவாக, ரம்யா நம்பீசன் இரண்டு பாடல்களுக்கும் பின்னணி குரல் கொடுத்து பின்னி பெடலெடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஸ்கோப் ரொம்ப குறைவாக தரப்பட்டிருக்கிறது. பாவம்!


கோட்டா சீனிவாசராவ், சாயாஜி ஷிண்டே இருவரது வில்லத்தனமும் நகைப்பூட்ட வேண்டுமென்பதற்காக திணிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நம்பிக்கை ஊட்டியுள்ளது. வைபவ் பிளாட்டின் வாட்ச்மேனாக சார்லி, ஹீரோ வைபவ்வின் நண்பராக பிரவின் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


எஸ்.எஸ்.தமனின் இசையில், உஷா உதுப் குரலில் டமாலு டுமீலு... பாடல் மட்டும் இன்னமும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருப்பது ப்ளஸ். ஏ.எம்.எட்வின் சகாயின் ஒளிப்பதிவு பளிச்! ஸ்ரீயின் இயக்கத்தில், ஆயிரமிருந்தும் வசதிகள் இருந்தும் நம்பமுடியாத பேன்டஸி கதை என்பதால் டமால் டுமீல் துப்பாக்கி தோட்டக்களாக தெறிக்கவில்லை. படத்தில் வைபவின் செல்போன் - ரிங்டோன் மாதிரியே டபாய்த்திருக்கிறது!


ஆக மொத்தத்தில், டமால் டுமீல் - ஊசிப்பட்டாசு!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in