விமர்சனம்
ஹீரோவாக புதுமுகம் சஞ்செய்.எஸ், கதாநாயகராக நடிப்பதற்காக எந்த பயிற்சியும், முயற்சியும் முறையே பெறாமல் நடித்திருப்பது ஆரம்பக் காட்சியிலேயே முகம் சுளிக்க வைத்து விடுகிறது. நடிக்க வேண்டும் என்ற ஆசை உடையவர் அதற்கான உடற்பயிற்சிகளையும் ஒழுங்காக கடைபிடித்திருந்தால் தேறி இருப்பார்.
ஹீரோயின் கிருஷ்ணஸ்ரீயும் ஹீரோவிற்கு ஏற்ற தேர்வு! சோர்வு!! இந்த இருவரின் குறைகளையும் மனோரமா, டெல்லிகணேஷ், கொட்டாச்சி, குள்ளமணி உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் நன்றாக நடித்து நிறை செய்திருப்பது ஆறுதல்! கே.ஜி.மாதவனின் ஒளிப்பதிவு ஓ.கே.! ராஜ்பவனின் இசையில் மல்லி மல்லி, கலக்கு கலக்கு... உள்ளிட்ட பாடல்கள் படத்திற்கு பலம்.
கிராமத்து காதலை கிராமிய மணம் கமழ நாள் நட்சத்திரம் படம் மூலம் சொல்ல முயற்சித்து நல்ல நட்சத்திரங்களை தேர்வு செய்யாமல் கோட்டை விட்டிருக்கிறார் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என பல பொறுப்புகளை ஏற்றிருக்கும் புதியவர் சக்தி சி.என்.ஆர்.
நாள் நட்சத்திரம் : துருவ நட்சத்திரமும் அல்ல, வால் நட்சத்திரமும் அல்ல.














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!