கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! |

படம் : பாபா
வெளியான ஆண்டு : 2002
நடிகர்கள் : ரஜினி, மனிஷா கொய்ராலா, ஆசிஷ் வித்யார்த்தி, கவுண்டமணி
இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்பு : ரஜினி
ஒரு நடிகரின் பட அறிவிப்பு, நாளிதழில் தலைப்பு செய்தியாக வெளிவந்தது என்றால், அது ரஜினியின் பாபா தான்! படையப்பா என்ற மாபெரும் வெற்றிக்கு பின், மூன்றாண்டுகள் கழித்து, தன் அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. இப்படம் குறித்த செய்தி, பரபரப்பாக பேசப்பட்டது. படப்பெட்டியை, பா.ம.க.,வினர் துாக்கி சென்று அட்டூழியம் நடத்தினர்; அதை, தமிழக அரசு கண்டுக்கொள்ளாமல் இருந்தது; ரஜினியின் செல்வாக்கு எவ்வளவு என்பது எல்லாம், பாபாவால் தெளிவானது. இது குறித்து, இப்போதும் ஓர் அரசியல் கட்டுரை எழுதலாம்.
நாம், படம் குறித்த தகவலுக்கு வருவோம்... நாத்திகராக இருக்கும் ரஜினிக்கு, பாபாவின் அருள் கிடைக்கிறது. அவருக்கு ஏழு மந்திரங்கள் உபதேசிக்கப்பட்டு, அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என, வரமளிக்கப்படுகிறது. தனக்கு கிடைத்த வரத்தை, அற்ப சோதனைகள் நடத்தி ரஜினி வீணாக்கிவிடுவார். கடைசியாக அவரிடம் ஒரு வாய்ப்பு மட்டுமே இருக்கும்... அதை பயன்படுத்தி, அவர் என்ன செய்தார் என்பது தான், படத்தின் திரைக்கதை.
இப்படத்தின் கதை, ரஜினியின் வாழ்க்கைக்கு ஓரளவிற்கு நெருக்கமானது. என்ன தான் ரஜினியை பிடிக்கும் என்றாலும், மூன்று மணி நேரமும், அவர் முகம் மட்டுமே, திரையில் தெரிந்தது, ஒருவித வெறுப்பை தோற்றுவித்தது. இது போதாது என்று, 10 நிமிஷத்துக்கு ஒருமுறை, பஞ்ச் டயலாக் பேசி, வெறுப்பேற்றினார். இது தவிர, எண்ணற்ற நட்சத்திர நடிகர்கள், ஓரிரு காட்சிகளில் இடம் பெற்றனர். நடன இயக்குனர்கள், பாடல் காட்சிகளில் இடம் பெற்றனர். இது எல்லாம், ஓவர் டோஸ் ஆக இருந்தது. பாபா படம், தோல்வியை தழுவியதால், நஷ்டமடைந்த வினியோகஸ்தர்களுக்கு, பணத்தை திரும்ப கொடுத்தார்.
ரஜினிக்கு பாடம் கற்றுக் கொடுத்தார், பாபா!