'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா |
ஹிந்தியில் ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் அக்சய்குமார், ஹூமா குரோசி, வாணி கபூர், லாரா தத்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பை திரில்லர் படம் பெல்பாட்டம். இந்த படத்தை கொரோனா தொற்று காரணமாக ஓடிடியில் வெளியிடப்போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதையடுத்து பெல்பாட்டம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும் என்று அறிவித்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அக்சய்குமார்.
இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்திருப்பதால் ஆகஸ்ட் 19-ந்தேதி பெல்பாட்டம் படத்தை தியேட்டரில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும், கொரோனா லாக் டவுனுக்கு பிறகு ரசிகர்களுக்கு தியேட்டர்களுக்கு வரும் ஆர்வம் குறைந்து விட்டதால், அவர்களை தியேட்டருக்கு இழுக்கும் முயற்சியாக பெல்பாட் டம் படத்தை 3டியில் வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.