ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் |
பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்ததாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விஷயத்தில் கணவருக்கு உதவியதாக ஷில்பா ஷெட்டி மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இணைய தளங்களில் ஷில்பா ஷெட்டியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எனது குழந்தைகளின் நலனுக்காக எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுங்கள் என்று ஷில்பா ஷெட்டி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்கள் எல்லாப் பக்கமும் சவால் மிகுந்ததாக இருந்தது. ஏராளமான வதந்திகளும், குற்றச்சாட்டுகளும் வலம் வந்தன. ஆதாரமற்ற தாக்குதல்களும் என் மீது தொடுக்கப்பட்டன. என் மீது மட்டுமின்றி, என் குடும்பத்தினர் மீதும் ஏராளமான கேலிகளும், கேள்விகளும் பதிவிடப்பட்டன. ஆனால், அவை எது குறித்தும் இன்னும் நான் கருத்து தெரிவிக்கவில்லை.
வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தொடர்ந்து இதுகுறித்து எதுவும் நான் கூறப்போவதில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மும்பை போலீஸ் மற்றும் இந்திய நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்களால் இயன்ற அனைத்து சட்டப்பூர்வமான வழிகளையும் முயன்று கொண்டிருக்கிறோம்.
எங்களுடைய குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுங்கள். ஒரு விஷயத்தின் உண்மைத் தன்மையை ஆராயாமல் அதுகுறித்து கருத்து கூறாதீர்கள். ஒரு தாயாக நான் உங்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்வது இது தான்.
நான் சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகள். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நான் அவர்களுடைய் நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன். என்னுடைய மற்றும் என் குடும்பத்தின் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கமாறு பணிவுடன் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஊடக சர்ச்சைக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை. சட்டம் அதன் கடமையைச் செய்ய விடுங்கள்.
இவ்வாறு ஷில்பா ஷெட்டி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.