ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் சமீபத்தில் தனது பாஸ்போர்ட் தேதி விரைவில் காலாவதியாக இருக்கிறது என்றும், அதை புதுப்பிப்பதற்காக தனக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அப்போது, நீதிமன்றம் அவர் மீது வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டதற்கு, தன் மீதுள்ள இரண்டு வழக்குகள் பற்றிய விபரங்களை அந்த மனுவில் தெரிவித்திருந்தார் கங்கனா.
ஆனால் பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், கங்கனா தன்மீது அவதூறான தகவல்களை ஒரு டிவி நிகழ்ச்சியின்போது கூறினார் என்று அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், அதுபற்றி கங்கனா நீதிமன்றத்தில் தெரிவிக்காமல், உண்மையை மறைத்து விட்டார் என்று குற்றம் சாட்டிய ஜாவேத் அக்தர். கங்கனாவின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க கூடாது என்று அந்தேரி மாநகர நீதிமன்றத்தில் இடையீட்டு மனு செய்தார்.
இந்தநிலையில் ஜாவேத் அக்தரின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் கங்கனா கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஜாவேத் அக்தர் அளித்த புகாரின் படி சாட்சியங்கள் என யாரிடமும் விசாரிக்காமல் போலீசார் தன்மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளா கங்கனா, அவரது மனுவை தள்ளுபடி செய்யுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.