‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ஒரு காலத்தில் பாலிவுட்டின் கனவு கன்னிகளில் ஒருவராக வளைய வந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் விஜய்யுடன் குஷி படத்தில் மேக்கரீனா பாடலுக்கு ஆடியவர். ஒருகட்டத்தில் பாலிவுட்டின் புதிய வரவுகளால் மவுசு குறைய தொடங்கவே, 2009ல் ராஜ் குந்த்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். இவர்களுக்கு வியான் என்கிற ஒரு மகனும் இருக்கிறான்.
இந்தநிலையில் தற்போது சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக பெண்களை ஏமாற்றி ஆபாசப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் ராஜ் குந்த்ரா. போலீஸ் விசாரணையில் ஷில்பா ஷெட்டிக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஷில்பா ஷெட்டிக்கு தெரியாமலேயே தான் இந்த வேலைகளை ராஜ் குந்த்ரா செய்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன் ஷில்பாவும் அவரது கணவரும் பிரிந்து வாழ்வதாக ஒரு செய்தி பலமாக அடிபட்டது.. அவரது கணவர் ராஜ் குந்த்ரா, ஷில்பாவுடன் இருக்க பிடிக்காமல் அவரது கம்பெனி அலுவலகத்திலேயே தங்கிவிடுவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதுகுறித்து ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ராவே அப்போது, ஒரு விளக்கம் அளித்தார்.
“நான் ஷில்பாவுடன் அதிக நேரம் செலவிடுவது இல்லை என அவரது தோழிகளிடம் குறைபட்டுக் கொண்டிருக்கிறார் ஷில்பா. அதுதான் இப்படி அப்படி என திரிந்து, நாங்கள் பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகும் அளவுக்கு வந்துவிட்டது. உண்மையில் ஒரு டீல் விஷயமாக தினசரி 20 மணி நேரம் ஆபிஸில் இருக்கிறேன்.. வீட்டில் இருக்கும் அந்த நான்கு மணி நேரமும் கூட வீட்டில் தலைகாட்டுவதற்கும் குளித்து உடைமாற்றிவிட்டு வருவதற்குமே சரியாக போய்விடுகிறது. உண்மை காரணம் இதுதான்” என கூறியிருந்தார் ராஜ்குந்த்ரா. ஒருவேளை அவர் குறிப்பிட்ட அந்த இருபது மணி நேர ஆபீஸ் ஒர்க் இதுவாகத்தான் இருந்திருக்குமோ என்னவோ ?