ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
பாலிவுட்டையும், கிரிக்கெட்டையும் பிரிக்க முடியாது. சில கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் கதாநாயகிகளை காதல் திருமணம் புரிந்துள்ளனர். அப்படியான காதல் ஜோடிகளில் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி, பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா சர்மா ஜோடி ரொம்பவும் பிரபலமான ஒரு ஜோடி. அந்த ஜோடிக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது தன் பிரசவத்திற்காக ஆஸ்திரேலியா தொடரை கூட பாதியில் விட்டுவிட்டு இந்தியா திரும்பினார் விராட் கோலி. மனைவியின் பிரசவத்தின் போது உடனிருந்து அவரை கவனித்துக் கொண்டார்
அவர்களது மகளுக்கு தற்போது ஆறு மாதம் முடிந்துள்ளது. அதை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். அந்தக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் அம்மாவாக ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார் அனுஷ்கா ஷர்மா.
"எங்களைச் சுற்றியுள்ள உலகத்தை அவளது ஒரு சிரிப்பு மொத்தமாக மாற்றி விடுகிறது. சின்னக் குழந்தையாக எங்களிடம் நீ எதிர்பார்க்கும் அந்த அன்பை வாழ்வில் உள்ளவரை நாங்கள் தருவோம். மூவராக நம்முடைய மகிழ்ச்சியான ஆறு மாதங்கள் " எனக் குறிப்பிட்டுள்ளார் அனுஷ்கா.
இந்த புகைப்படத்திற்கு 37 லட்சம் லைக்குகளை கிடைத்துள்ளன என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.