காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் |
கடந்த சில வருடங்களாகவே தென்னிந்திய சினிமாவில் வலுவாக காலூன்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர். தென்னிந்திய மொழிகளில் படம் தயாரிப்பது, இங்கே ஹிட் ஆகும் படங்களை பாலிவுட்டில் ரீமேக் செய்வது என பிஸியாக ஓடிக் கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் ஹிந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை மற்றும் தெலுங்கில் வக்கீல் சாப் என ரீமேக் செய்தார். உதயநிதியை வைத்து ஆர்டிகிள் 15 படத்தை ரீமேக் செய்து வருகிறார். இதுதவிர அஜித்தை வைத்து வலிமை என்கிற நேரடி தமிழ் படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான, மம்முட்டி முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்த, தி ஒன் என்கிற படத்தின் ஹிந்தி உட்பட மற்றும் சில மொழிகளின் ரீமேக் உரிமையையும் கைப்பற்றியுள்ளார் போனி கபூர். ஹிந்தியில் மிகப்பெரிய நடிகர் ஒருவரை நடிக்க வைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். மலையாளத்தில் இந்தப்படம் சரியாக போகாவிட்டாலும் கூட, எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் அரசியல் கதை என்பதால் சில மாற்றங்களை செய்து ரீமேக் செய்தால் படம் ஹிட்டாகும் என நம்பி களத்தில் இறங்கியுள்ளாராம் போனி கபூர்.