தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! |

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் நடிகரும், பிரபல பாடகருமான நிக் ஜோனஸ் என்பவரை 2018ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவில் தனது கணவருடன் வசித்து வரும் பிரியங்கா, தற்போது நியூயார்க் சிட்டியில் புதிய ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கு 'சோனா' எனப் பெயர் வைத்திருக்கிறார்.
புதிய ஹோட்டர் திறப்பு பற்றி, “நான் இறுதியாக சோனா நியூயார்க்கில் இருக்கிறேன். என்னால் நம்ப முடியவில்லை, 3 வருட திட்டமிடலுக்குப் பிறகு எங்களது அன்பின் உழைப்பைப் பார்க்கிறேன். சோனா உருவாகக் காரணமாக இருந்த குழுவை கிச்சனுக்குள் சென்று பார்க்க எனது இதயம் முழுவதும் நிரம்பியுள்ளது, அது ஒரு அற்புதமான அனுபவம்.
எனது பெயருடன் கூடி தனிப்பட்ட டைனிங் அறை 'மிமிஸ்' அற்புதமான இன்டீரியருடன், இந்திய கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சுவையான உணவுகள், டிரிங்ஸ் ஆகியவற்றுடன் சோனா அனுபவம் வித்தியாசமாகவும், எனது இதயத்தின் ஒரு பகுதியாகவும், நியூயார்க் சிட்டியின் இதயமாகவும் இருக்கும்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.