மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

அக்ஷய்குமார், வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா நடித்துள்ள படம் பெல்பாட்டம். 1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம் இது. ரஞ்சித் எம் திவாரி இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் கொரோனா காலத்துக்கு இடையில் ஒரே கட்டமாக லண்டனில் நடந்து முடிந்தது. படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளும் முடிந்த நிலையில் படம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது.
இந்த ஆண்டு இறுதிவரை தியேட்டர்கள் திறக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் உரிமையை கடும் போட்டிக்கு இடையே, அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும்.
இதற்கிடையில் தனது பட வெளியீடு தொடர்பாக அக்ஷய்குமார் விடுத்துள்ள அறிக்கையில், "பெல் பாட்டம் பட வெளியீடு குறித்து எனது ரசிகர்களின் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். அத்துடன் அவர்களின் அன்பிற்கு எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வெளியீட்டுத் தேதி குறித்து தயாரிப்பாளர்கள் ஆலோசித்து வருகிறார்கள். சரியான நேரத்தில் அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.