'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரித்விராஜ் - பிஜுமேனன் நடிப்பில் மறைந்த இயக்குனர் சாச்சி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். ஒய்வு பெறப்போகும் போலீஸ் அதிகாரிக்கும், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவருக்கும் நடக்கும் ஈகோ மோதல் தான் படத்தின் கதை. இந்தப்படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமைகள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டன.
தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிக்க, இந்தியில் ஜான் ஆப்ரஹாம் நடிக்க உள்ளார். தமிழில் தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் இதன் உரிமையை வாங்கி வைத்திருந்தாலும், இதில் யார் நடிக்கப்போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.. இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தின் கன்னட ரீமேக் உரிமையும் நல்ல விலைக்கு கைமாறியுள்ளதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என தெரிகிறது.