ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
நடிகை வித்யாபாலன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் டர்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் வித்யாபாலன். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யாபாலனுக்கும், யு.டி.வி. தலைமை அதிகாரி சித்தார்த் ராய் கபூருக்கும் வருகிற டிசம்பர் 14ம்தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. வித்யாபாலன் கேரளத்து தமிழ் பெண் என்பதாலும் சென்னையில் வளர்ந்தவர் என்பதாலும் தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். முன்னதாக 11ம்தேதி பஞ்சாப் முறைப்படி திருமண சடங்குகள் நடக்கின்றன.
திருமணம் முடிந்த கையோடு சென்னையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த வித்யாபாலன் முடிவு செய்துள்ளார். தமிழ் திரையுலகில் தனக்கு இருக்கும் நண்பர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக சென்னையிலேயே வரவேற்பு நிகழ்ச்சியை வைத்துள்ளார். முன்னதாக மும்பையில் நடைபெறும் திருமணத்தில் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். திரையுலக பிரமுகர்கள் மிலன் லூத்ரியா, விஷால் பரத்வாஜ், ராஜ்குமார் குப்தா, பால்கிரக்தா, துச்சார்கபூர் ஆகியோரும் அழைக்கப்பட்டு உள்ளனர். திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.