‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சல்மான்கான் எனக்கு அண்ணன் மாதிரி, என்று அவரது மாஜி காதலியும், நடிகையுமான கத்ரீனா கைப் கூறியுள்ளார். சல்மான் கானும், கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் அவ்வளவு நெருக்கமான காதலர்கள். கத்ரீனாவை திருமணம் செய்ய சல்மான் விரும்பினார். அதன் பிறகு ஆளுக்கொரு திசையாக பிரிந்து சென்றுவிட்டனர். சல்மானைப் பிரிந்த கத்ரீனா அவரின் பரம எதிரியான ஷாருக்கானுடன் அண்மையில் ஜோடி சேர்ந்தார். சூட்டிங்கின்போது அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கத்ரீனா சல்மான் கான் என் அண்ணன் மாதிரி என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு பலர் அதிர்ச்சி அடைந்தனர். சல்மான் கானை அண்ணன் என்று கூறிய கத்ரீனாவை சல்மானின் ரசிகர்கள் ட்விட்டரில் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.