'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ஆலியா பட் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'கங்குபாய் கத்தியவாடி'. இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியானது.
டீசர் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தாலும் அதற்குள் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஹுசைன் சைதி எழுதிய 'மாபியா குயின்ஸ் ஆப் மும்பை' என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்படும் இக்கதையில் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியான காமாத்திபுராவை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம்.
விபச்சாரத் தொழில் செய்யும் பெண்ணாக இருந்து பெண்களின் அதிகாரத்திற்காகக் குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்துள்ளார். ஆனால், டீசரில் ஆலியாவிற்கு எதிராக பல கிண்டலான கமெண்ட்டுகள் பதிவாகியுள்ளன. “வித்யாபாலன் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தால், இன்னும் சிறப்பாக நடித்திருப்பார், “ஆலியா இக்கதாபாத்திரத்தில் பொருத்தமாக இல்லை, குழந்தையைப் போல இருக்கிறார், “எந்தத் தோற்றத்தில் நடிக்க வைத்தாலும் ஆலியா ஸ்கூல் நிகழ்ச்சிகளில் நடிக்கும் குழந்தையைப் போலவே இருக்கிறார், “ஒரு விளம்பரத்தில் குழந்தைகள், பெரியவர்களைப் போன்று நடிப்பார்கள், அது போல இருக்கிறது இது என்று ஒருவர் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்துள்ளார்..” என்பது போன்ற விதவிதமான கிண்டல் கமெண்ட்டுகள்தான் யு டியூபில் ஆக்கிரமித்துள்ளன.
மேலும், ரசிகர்களின் கமெண்ட்டுகளை டீசரை வெளியிட்டவர்கள் நீக்குவதாகவும் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். பெரும்பாலானோர் வித்யா பாலன்தான் இக்கதாபாத்திரத்தில் நடிக்கப் பொருத்தமானவர் என்று தெரிவித்துள்ளார்கள்.