சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'கங்குபாய் கத்தியவாடி'. இப்படத்தின் டீசர் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. யு டியுபில் 30 மில்லியன் பார்வைகளைத் தொட உள்ளது.
மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியான காமாத்திபுராவைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் இது. ஹுசைன் சைதி எழுதிய 'மாபியா குயின்ஸ் ஆப் மும்பை' என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் எம்எல்ஏவான அமின் பட்டேல் என்பவர் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். 'கத்தியவாடி' நகரின் பெயரைக் கெடுப்பது போல தலைப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“1950களில் இருந்த நகரைப் போல அது இல்லை. அங்கிருந்த பல பெண்கள் தற்போது பல விதமான வேலைகளுக்குச் சென்றுவிட்டார்கள்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
படத்தின் டீசருக்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படங்களுக்கு எப்போதுமே சர்ச்சை வருவது வழக்கம். இந்தப் படத்திற்கும் அது போலவே வந்துள்ளதாக பாலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.