பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
சில வருடங்களுக்கு முன்பு வரை பாலிவுட்டில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சுனில் ஷெட்டி. தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களுக்கு தன்னை மாற்றி கொண்ட சுனில் ஷெட்டி, தர்பார், பயில்வான், விரைவில் வெளியாக இருக்கும் 'மரைக்கார்' என தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகராக மாறிவிட்டார். இந்தநிலையில் அவரது மகன் ஆஹான் ஷெட்டியும் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். பிரபல இயக்குனரான சாஜித் நடியத்வாலா டைரக்சனில் உருவாகும் 'தடாப்' என்கிற படத்தில் தான் இவர் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படம் செப்-24ஆம் தேதி ரிலீசாகிறது.
படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளதுடன் ஆஹான் ஷெட்டியின் அறிமுகம் குறித்த தகவலையும் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் அக்சய் குமார். மேலும் அவர் ஆஹான் ஷெட்டி பற்றி கூறும்போது, “உன்னுடைய தந்தை அறிமுகமான 'பயில்வான்' படத்தின் போஸ்டரில் இருந்து அவரை பார்த்து வருகிறேன். இப்போது நீ ஹீரோவாக அறிமுகமாகும் போஸ்டரை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன்” என கூறியுள்ளார்.
அக்சய் குமாரும் சுனில் ஷெட்டியும் தொண்ணூறுகளின் ஆரம்பகாலத்தில் ஒரே சமயத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..