5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. அவரது கல்லீரல் 70 சதவீதம் செயல் இழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று ஓரளவிற்கு குணமடைந்தார். சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்தும் மீண்டார்.
அதன் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். மே டே, பிரம்மாஸ்த்ரா படங்களில் நடித்து வருகிறார். பிரபாசுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் அமிதாப்பச்சன் தீடீரென மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கல்லீரல் பிரச்சினை மீண்டும் வந்திருப்பதாகவும், இதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமிதாப் தனது டுவிட்டரில் "மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, எழுத இயலவில்லை என்று பதிவிட்டுள்ளார். இது அமிதாப் பச்சனின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.