மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகும் ஒவ்வொரு நடிகைக்குமே அடுத்து பாலிவுட்டில் கொடியேற்ற வேண்டும் என்பதுதான் தீராத கனவாக இருக்கும். அந்த வரிசையில் ஸ்ரீதேவிக்கு பிறகு பல நடிகைகள் இங்கிருந்து இந்தி சினிமாவுக்கு சென்றதில் அசின் பெரிய அளவில் தற்போது புகழ் பெற்றிருக்கிறார். அதனால் அடுத்தடுத்து காஜல் அகர்வால், தமன்னா போன்ற நடிகைகள் இந்தியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் நண்பன் படத்தில் நடித்த இலியானாவும் அந்த படத்தை முடித்த கையோடு இந்தியில் ரன்பீர்கபூர் நடித்த பர்பி படத்தில் நடித்தார். படம் வெற்றி பெற்றதோடு, இலியானாவின் நடிப்பும் அங்குள்ளவர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. இதனால் மேலும் புதிய படங்களை கைப்பற்றும் அதிரடி முயற்சியில் இறங்கியிருக்கும் அவர், இனி அசினைப்போன்று மும்பையிலேயே செட்டிலாகி முழு நேர இந்தி நடிகையாகப்போவதாக கூறுகிறார்.