குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? |
தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி 2 படங்களில் நடித்தவர் நடிகை கஜோல். ஹிந்தி நடிகையான இவரும், நடிகர் அஜய் தேவ்கனும் சிறந்த தம்பதியராக ஹிந்தி படவுலகினரால் பேசப்படுகிறார்கள். இந்த ஜோடிக்கு பிறந்த இரு குழந்தைகளில் ஒருவர் நைசா தேவ்கன். வயது பதினைந்து. இன்னொரு குழந்தையின் பெயர் யுவ் தேவ்கன். அவனுக்கு வயது எட்டு.
பெண் மற்றும் பையனோடு சேர்ந்து கஜோலும், அஜய் தேவ்கனும், தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அந்நாட்டுக் கடற்கரைக்கு குடும்பத்தோடு சென்றுள்ளனர். அங்கு வைத்து நிறையப் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். கஜோலின் பெண் நைசா தேவ்கன், பிகினி உடையில் கடற்கரைக்கு வந்திருக்கிறார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் கஜோல்.