மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தமிழ், மலையாள ரசிகர்களை வசீகரித்த மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப், ஹிந்தியிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் டைரக்சனில் ஹிந்தியில் உருவாகிவரும் தி பாடி (the body ) என்கிற படத்தில் இம்ரான் ஹாஸ்மி கதாநாயகனாக நடிக்க, ரிஷி கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக வேதிகா நடித்துள்ளார்.
பொதுவாக பாலிவுட் உலகம் சற்றே சோம்பேறித்தனத்துடன் தான் இயங்கும்.. ஆனால் ஜீத்து ஜோசப்போ பாலிவுட் நட்சத்திரங்களையும் இதற்கு முன் இருந்த படப்பிடிப்பு நடைமுறைகளையும் தனக்கேற்ற மாதிரி வளைத்துக் கொண்டுள்ளார். அதன்மூலம் இந்தப்படத்தை வெறும் 39 நாட்களில் ஒரேகட்ட படப்பிடிப்பாக நடத்தி முடித்து பாலிவுட் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். இது ஒரு ஸ்பானிஷ் த்ரில்லர் பட ரீமேக்காக உருவாகியுள்ளது.