‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப். கடந்த வெள்ளியன்று இவரது இயக்கத்தில் வெளியான முக்காபாஸ் படம் பரவலாக பாராட்டை பெற்று வருகின்றது. சிறிய அளவிலான பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ.5 கோடி வசூலித்திருக்கிறது.
சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் அனுராக் காஷ்யாப், அவரிடம், எப்போது ஷாரூக்கான் உடன் பணியாற்ற போகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அனுராக், ஷாரூக்கானை இயக்காமல் நான் எங்கும் சென்றுவிட மாட்டேன். அவரை கவரும் வகையில் கதை உருவாக்குவேன், என்னுடைய படத்தில் நிச்சயம் அவர் நடிப்பார் என்று கூறியுள்ளார்.