போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நடிகர் ஷாரூக்கான், ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ஷாரூக்கான் ஜோடியாக கத்ரீனா கைப், அனுஷ்கா சர்மா நடிக்கிறார்கள். படத்தில் ஷாரூக்கான், குள்ள மனிதராக நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், படத்திற்கு தலைப்பு வைக்காமலே படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் படத்திற்கு ஜீரோ என்று பெயரிட்டுள்ளனர். அத்துடன், ஜீரோ படத்தின் சிறிய அளவிலான டீசரையும் வெளியிட்டுள்ளனர். அதில், ஷாரூக்கான் குள்ள மனிதராக ஆடிப்பாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஷாரூக்கானின் தோற்றம் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த டீசர், ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. வரும் டிச., 21-ம் தேதி படம் ரிலீஸாகிறது.